புபொப 1097

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புபொப 1097
NGC 1097
கண்டறிந்த தகவல்கள் (ஜெ2000 ஊழி)
விண்மீன் குழுபோர்னாக்சு
வல எழுச்சிக்கோணம்02h 46m 19.0s[1]
பக்கச்சாய்வு-30° 16′ 30″[1]
செந்நகர்ச்சி1271 ± 3 கிமீ/செ[1]
தூரம்45 மில். ஒஆ[2]
வகை(R'_1:)SB(r'l)bSy1[1]
தோற்றப் பரிமாணங்கள் (V)9′.3 × 6′.3[1]
தோற்றப் பருமன் (V)10.2[1]
ஏனைய பெயர்கள்
ESO 416- G 20, மு.வி.ப. 10488,[1] ஆர்ப் 77[1] கால்டுவெல் 67
இவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்

புபொப 1097 (NGC 1097) என்பது போர்னாக்சு என்ற விண்மீன் குழாமில் கிட்டத்தட்ட 45 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஒரு தண்டு கருச்சுருள் அண்டம் ஆகும். இதனை 1790 அக்டோபர் 9 இல் வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார். இவ்வண்டத்தில் மீன்று மீயொளிர் விண்மீன் வெடிப்புகள் அவதானிக்கப்பட்டன.

ஏனைய பெரும் விண்மீன் பேரடைகள் போன்று புபொப 1097 இன் நடுவில் ஒரு மீப்பெரும் கருந்துளை காணப்படுகிறது. இக்கருந்துளை நமது சூரியனை விட 140 மில்லியன் மடங்கு அதிக நிறை கொண்டதாகும்.[3] நடுக் கருந்துளையைச் சுற்றி விண்மீன்-தோன்றும் பகுதிகளைக் கொண்ட வளையம் காணப்படுகிறது. வளிமம் மற்றும் தூசிகளைக் கொண்டதாக இப்பகுதிகள் வளையத்தில் இருந்து சுருளாக சுழன்று கருந்துளையை அடைகின்றன.

புபொப 1097 இரண்டு துணை விண்மீன் பேரடைகளைக் கொண்டுள்ளது. இவற்றில் பெரியது புபொப 1097ஏ என்ற குள்ள நீள்வட்ட பேரடை ஆகும். இது புபொப 1097 ஐ அதன் மத்தியில் இருந்து 42,000 ஒளியாண்டுகள் தொலைவில் நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. புபொப 1097பி என்ற குள்ள பேரடை சூரியனின் நிறையைப் போன்று 5 x 106 மடங்காகும்.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "NASA/IPAC Extragalactic Database". Results for NGC 1097. http://nedwww.ipac.caltech.edu/. பார்த்த நாள்: 2006-11-25. 
  2. "Feeding the Monster: New VLT Images Reveal the Surroundings of a Super-massive Black Hole". European Southern Observatory. http://www.eso.org/public/outreach/press-rel/pr-2005/phot-33-05.html. பார்த்த நாள்: 2008-03-15. 
  3. "Astronomers Measure Mass of Supermassive Black Hole in NGC 1097". Sci-news. 18 சூன் 2015. http://www.sci-news.com/astronomy/science-supermassive-black-hole-ngc1097-02928.html. பார்த்த நாள்: 19 சூன் 2015. 

வெளி இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: Sky map 02h 46m 19.0s, −30° 16′ 30″

"https://ta.wikipedia.org/w/index.php?title=புபொப_1097&oldid=3574229" இருந்து மீள்விக்கப்பட்டது