புனித ஜோர்ஜ் தேவாலயம், லலிபெலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித ஜோர்ஜ் தேவாலயம்
በት ጊዮርጊስ
புனித ஜோர்ஜ் தேவாலயம், பாறையில் சிலுவை வடிவில் செதுக்கப்பட்டுள்ளது
புனித ஜோர்ஜ் தேவாலயம் is located in Ethiopia
புனித ஜோர்ஜ் தேவாலயம்
புனித ஜோர்ஜ் தேவாலயம்
Location within Ethiopia
12°1′53.85″N 39°02′28.13″E / 12.0316250°N 39.0411472°E / 12.0316250; 39.0411472
நாடுஎதியோப்பியா
சமயப் பிரிவுஎதியோப்பியா மரபுவழித் திருச்சபை

புனித ஜோர்ஜ் தேவாலயம் (Church of St. George) என்பது எதியோப்பியாவின் அம்காரா நகரில் உள்ள லலிபெலா எனும் இடத்தில் தனிப்பாறையால் அமைக்கப்பட்ட பதினொரு தேவாலயங்களில் ஒன்று ஆகும். ரோகா அல்லது வார்வார் என முன்னர் அழைக்கப்பட்ட வரலாற்று மற்றும் சமய இடமான இது, எதியோப்பியா மரபுவழித் திருச்சபையால் புனிதர் போன்று பார்க்கப்பட்ட கெப்ரே மெஜ்கல் லலிபெலா அரசருக்குப் பின் தற்போது லலிபெலா என அழைக்கப்படுகிறது.

வரலாறு[தொகு]

இத்தேவாலயம் ஒருவித ஒற்றை சுண்ணாம்புக்கல் பாறையைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது. இது 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் கெப்ரே மெஜ்கல் லலிபெலா அரச பணிப்பின் கீழ் கட்டப்பட்டது.[1] இது லலிபெலாவில் உள்ள பதினொரு தேவாலயங்களில் முக்கியமாக அறியப்பட்டதும் கடைசியாக கட்டப்பட்டதுமாகும். அத்துடன் இது எட்டாவது உலக அதிசயமாகக் கருதப்படுகிறது.[2]

உசாத்துணை[தொகு]

  1. Moriarty, Colm. "St. George's Church, Ethiopia". Irish Archaeology. 29 May 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Lalibela:The Eighth Wonder of the World". Tzu Chi Foundation. 21 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 10 November 2006 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bete Giyorgis
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

ஆள்கூறுகள்: 12°01′53.85″N 39°02′28.13″E / 12.0316250°N 39.0411472°E / 12.0316250; 39.0411472