உள்ளடக்கத்துக்குச் செல்

புனித ஜான் தாக்கரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித ஜான் தாக்கரே
பிறப்பு1778
இறப்பு23 அக்டோபர் 1824
தார்வாடு, கருநாடகம், இந்தியா
கல்லறைதார்வாடு, கருநாடகம்
குடியுரிமைபிரித்தானியர்
அறியப்படுவதுபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் தெற்கு மராத்தா தோப் பகுதிக்கான சேகரிப்பாளர் மற்றும் அரசியல் முகவர்

புனித ஜான் தாக்கரே (St John Thackeray) (1778 – 1824) ஒரு சேகரிப்பாளரும் மற்றும் அரசியல் முகவரும் ஆவார். இவர் 1820 களில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்காக தென்னிந்தியாவில் பணிபுரிந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ஜான் தாக்கரே, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் [1] தெற்கு மராத்தா தோப் பகுதிக்கு ஆட்சியராகவும் அரசியல் முகவராகவும் பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் சென்னை குடிமைப் பணிப் பிரிவைச் சேர்ந்தவர்.[2]

கித்தூர் மீது தாக்குதல்[தொகு]

பின்னணி[தொகு]

கர்நாடக மாநிலத்தில், கித்தூர் ராச்சியத்தில், அரசரான முல்லசர்ஜா என்பவருக்கு ராணி சென்னம்மா என்பவருடன் திருமணம் நடந்தது.[3] அரசன் 1816இல் இறந்து விட்டார். அவர்களது ஒரே மகனும் 1824இல் இறந்து விடவே, சென்னம்மா சிவலிங்கப்பா என்பவரைத் தன் மகனாக தத்து எடுத்துக் கொண்டு, அவருக்கு முடிசூட்டினார். ஆங்கிலேயர்களுக்கு இது பிடிக்கவில்லை. ஆகவே, அவர்கள் சிவலிங்கப்பாவை நாடு கடத்த ஆணையிட்டார்கள். ராணி சென்னம்மா இந்த ஆணையை மதிக்கவில்லை. ஒரு மிகப்பெரிய போர் மூண்டது. புனித ஜான் தாக்கரே 23 அக்டோபர் 1824 சென்னம்மாவின் வீரர் ஒருவர் தாக்கரேவை சுட்டுக் கொன்றார்.[4]

இறப்பு[தொகு]

இந்தியாவின் கர்நாடகாவின் தார்வாடில் உள்ள பிரித்தானியர்களின் கல்லறையிலுள்ள தாக்கரேயின் கல்லறை அமைந்துள்ளது. மேலும், தாக்கரேயின் நினைவாக தார்வாடு நகரில் ஒரு கல் தூபி கட்டப்பட்டது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Thackeray's Monument, Dharwar". British Library. பார்க்கப்பட்ட நாள் 28 November 2012.
  2. Asiatic Journal Vol 3. London: Parbury, Allen, and Co. 1830. pp. 218–222.
  3. P, V (16 July 2010). "The legend lives on". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/article517712.ece. பார்த்த நாள்: 29 November 2012. 
  4. P, V (16 July 2010). "The legend lives on". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-editorialfeatures/article517712.ece. பார்த்த நாள்: 29 November 2012. 
  5. "Thackeray's Monument, Dharwar". British Library. பார்க்கப்பட்ட நாள் 28 November 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனித_ஜான்_தாக்கரே&oldid=3854851" இலிருந்து மீள்விக்கப்பட்டது