உள்ளடக்கத்துக்குச் செல்

புதைசேற்று எரிமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசர்பெய்சான் நாட்டின் கோபுஸ்தான் மாகாணத்தில் புதைசேற்று எரிமலைகள்

புதைசேற்று எரிமலை (mud volcano or mud dome) என்பது பூமிக்கடியிலிருந்து வெளிப்படும் திரவங்கள் மற்றும் வாயுக்களால் ஆனது. புதைசேற்று எரிமலைகள் பல்வேறு நிலவியல் வழிமுறைகளால் உண்டாகின்றன. சாதாரண எரிமலைகளில் வெளிப்படும் கடும் வெப்பநிலையை விட மிகக்குறைவாகவே புதைச்சேற்று எரிமலைகளில் காணப்படுகிறது.

புதைச்சேற்று எரிமலைகளில் காணப்படும் வாயுக்களில் மீத்தேன் வாயு மற்றும் கரியமிலவாயுவும்; திரவங்களில் உப்பு மற்றும் அமிலங்களும் அதிகம் காணப்படுகிறது.[1]

எரிமலைகள் அளவிற்கு தீக்குழம்புகளை வெளிப்படுத்தாவிட்டாலும், சில நேரங்களில் வெறும் தீயை மட்டும் புதைசேற்று எரிமலைகள் வெளிப்படுத்துகின்றன. அக்டோபர், 2001-இல் அசர்பெய்சான் நாட்டு புதைசேற்று எரிமலை தீயை மட்டும் கக்கியது.[2]

இந்தியாவில்[தொகு]

அந்தமான் - பரட்டாங்கு தீவில் புதைசேற்று எரிமலை

இந்தியாவில் அந்தமானில் உள்ள பரட்டாங்கு தீவில் புதைச்சேற்று எரிமலை ஒன்று காணப்படுகிறது. இப்புதைசேற்று எரிமலையில் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை நிலத்தடியிலிருது மிக மிகச் சிறிய அளவில் சேற்றுடன் திரவங்களும் வாயுக்களும் வெளிப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதைசேற்று_எரிமலை&oldid=3221786" இலிருந்து மீள்விக்கப்பட்டது