புதுமைப்பித்தன் வீதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதுமைப்பித்தன் வீதி என்பது தமிழ்நாட்டின், திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இருக்கும் வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு தெருவாகும். முன்பு இது சாலை தெரு என்று அழைக்கப்பட்டது. புதுமைப்பித்தன் அந்தத் தெருவில் தன் 12 வயது முதல் 25 வயதுவரை அதாவது 13 ஆண்டுகள் வாழ்ந்தார். இதனால் பல ஆண்டுகளாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இந்தத் தெருவுக்கு, புதுமைப்பித்தன் பெயரைவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துவந்துள்ளனர்.[1] அதன் பலனாக 2016 செப்டம்பர் 15இல் அந்தத் தெருவுக்கு ‘புதுமைப்பித்தன் வீதி’ என்று நெல்லை மாநகராட்சி பெயர்மாற்றம் செய்தது.[2]

சிறுகதையில்[தொகு]

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் வசதியாக வாழ்ந்த வெள்ளாளர்களின் சமூகத்தைப் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தது பற்றியும் தன் நாசராக கும்பல் என்ற சிறுகதையில் எழுதியுள்ளார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமுஎகச கோரிக்கை ஏற்பு வண்ணார்பேட்டை சாலைத்தெரு ‘புதுமைப்பித்தன் வீதி’ ஆனது". செய்தி. தீக்கதிர். பார்த்த நாள் 3 சூன் 2018.
  2. முகமது ஹுசைன் (2018 மே 26). "தமிழ் எழுத்தாளரின் பெயரில் ஒரு வீதி". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 3 சூன் 2018.
  3. "புதுமைப்பித்தன் வீதியிலிருந்து". செய்திக் கட்டுரை. தினமணி (2016 செப்டம்பர் 24). பார்த்த நாள் 3 சூன் 2018.