புதுநாட்ராய சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றூர். இவ்வூர் திருப்பூர் தாராபுரம் சாலையில் கொடுவாய் நகரத்திற்கு அடுத்து அமைந்துள்ளது. இவ்வூரில் புதுநாட்ராய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. காம்பிலி நதி என்ற நதியின் வடகரையில் அமைந்துள்ளது.

தல வரலாறு[தொகு]

300 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வூரின் பகுதிகள் காடுகளாக இருந்து வந்தன. மக்கள் மாடு மேய்த்தல் தொழில் செய்து வந்தனர். பசுமாடு ஒன்று தினமும் கிழுவன் மரத்தின் கீழ் உள்ள புதர் மறைவில் சென்று பால் சுறந்து வந்தது. தினமும் பால் குறைவதைக் கண்ட மாடு மேய்பவர் மறைந்திருந்து பசு மாட்டைக் கண்காணித்தபொழுது பசு புதர் மறைவில் உள்ள புற்றிற்கு பால் சுரப்பத்தைக் கண்டார். அன்றிரவு மாடு மேய்த்தவரின் கனவில் தோன்றி தான் நாட்ராயன் நாச்சிமுத்து என்ற பெயரில் புற்று வடிவில் குடி கொண்டு இருப்பதாக இறைவன் தெரிவித்தார். அதம் பின்பு கோயில் அமைக்கப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

தேர் திருவிழா[தொகு]

ஆண்டுதோறும் மாசி மாதம் மகா சிவராத்திரின்று பல்லயம் என்ற தானிய படைத்தலுடன் தேர் திருவிழா தொடங்குகிறது.அடுத்த நாள் மாலை திருத்தேர் கோவில் வலம் வருதல் நடை பெறுகிறது.மூன்றாம் நாள் வனபூஜை என்ற பூஜையும் அன்னதானம் நடைபெறுகிறது

ஆலய சிறப்பு[தொகு]

விஷ பூச்சிகளால் மக்கள் பாதிக்கப்படும் பொழுது பாதிக்கப்பட்டவரை இறைவன் முன் படுக்க வைத்து திருநீர் மற்றும் வேம்பு இலைகளால் பிரசாதமாக தரப்படுகிறது.

மேற்கோள்[தொகு]

கிராமபுற கோவில்கள் வரலாறு -ஆசிரியர் சிவஞானம்

http://tiruppur.nic.in/revvillage.html பரணிடப்பட்டது 2017-07-07 at the வந்தவழி இயந்திரம்