புதுக்கோட்டை அபர்ணா கொலை வழக்கு
புதுக்கோட்டை அபர்ணா கொலை வழக்கு என்பது தமிழ்நாட்டின் குற்றவியல் மற்றும் நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான ஒரு வழக்காகும். ஒரு கொடூரக் குற்றத்தில் ஒட்டுமொத்த அரசு மற்றும் புலனாய்வு அமைப்புகளும் தோல்வியடைந்ததை இந்த வழக்கு வெளிச்சமிட்டுக் காட்டியது.
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் நாள் புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில், வீட்டில் தனியாக இருந்த 14 வயது பள்ளி மாணவி அபர்ணா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, தூக்கில் தொங்கிய நிலையில் படுகொலை செய்யப்பட்டார். உள்ளூர் காவல்துறையும், பின்னர் மாற்றப்பட்ட மாநில காவல்துறையின் மிக முக்கிய மற்றும் சிறப்பு வாய்ந்த குற்றப்புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) பிரிவும் தீவிர விசாரணை நடத்தியும் குற்றவாளிகள் பற்றி எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. செப்டம்பர் 2013 இல் மாநில காவல்துறையின் விசாரணையில் தொய்வு ஏற்பட்டதால், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இவ்வழக்கை மத்திய அரசின் முதன்மைக் குற்றப் புலனாய்வு (சிபிஐ) அமைப்பிற்கு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
ஜனவரி 2014 இல் சிறுமியின் உடலை முதன்முதலில் பார்த்த முக்கிய சாட்சியான சாமிநாதன் என்பவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அதிகாரிகள் பல கட்டங்களாகப் புதுக்கோட்டையில் முகாமிட்டு விசாரணை நடத்தியும், போதிய அறிவியல் பூர்வ தடயங்கள் இல்லாததால் குற்றவாளிகளைக் கண்டறிய முடியவில்லை. வழக்கில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால், சிபிஐ தரப்பில் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கை முடித்துக்கொள்வதாக இறுதி அறிக்கை 2019 இல் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 31, 2022 இல் குற்றவாளிகள் பிடிபடவில்லை என்றாலும், புலனாய்வு அமைப்புகளின் தோல்வியைக் கருத்தில் கொண்டு, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்குத் தமிழக அரசு ₹7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்தது.
பாதிக்கப்பட்டவர் விபரம்
[தொகு]- பெயர்: அபர்ணா
- வயது: 15
- பெற்றோர்: கலைக்குமார் (தலைமை ஆசிரியர், பிரஹதாம்பாள் பள்ளி) ராஜம் (ஆசிரியை சந்தைப்பேட்டை பள்ளி)
- படிப்பு: பத்தாம் வகுப்பு
சம்பவம்
[தொகு]2011-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ம் தேதி பெற்றோர் பள்ளிக்குச் சென்றிருந்த நேரத்தில், அபர்ணாவும் அவரது தம்பியும் மட்டுமே வீட்டில் தனியாக இருந்துள்ளனர். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள், சிறுமி அபர்ணாவை ஆயுதங்களால் தலை மற்றும் வயிற்றில் தாக்கியும், பாலியல் வன்கொடுமை செய்தும் கொடூரமாகக் கொலை செய்தனர்.[1] பின்னர், கொலையை மறைப்பதற்காக அவரது தாயாரின் புடவையைப் பயன்படுத்தி, உடலை படுக்கையறை மின்விசிறியில் தூக்கில் தொங்கவிட்டுவிட்டு, பீரோவில் இருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவத்திற்கு அவரது சிறிய தம்பியே சாட்சி. [2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Aparna murder probe heading in right direction: IG". 31 மார்., 2013 – via The Economic Times - The Times of India.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ "பள்ளி மாணவி அபர்ணா கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகள் புதுகையில் விசாரணை". தினமணி. 3 பிப்., 2015.
{{cite web}}: Check date values in:|date=(help)