உள்ளடக்கத்துக்குச் செல்

புண்யா கீந்தெனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புண்யா கீந்தெனியா
පුණ්‍යා හීන්දෙනිය
பிறப்புகீந்தெனிய விதானரலலகே புண்யா கீந்தெனியா
31 சூலை 1938 (1938-07-31) (அகவை 86)
கம்பகா, இலங்கை
தேசியம்இலங்கையர்
கல்விமீரிகமை மத்திய கல்லூரி
பணிதிரைப்பட நடிகை, பாடகி, திரைக்கதை எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
1955-1983
வாழ்க்கைத்
துணை
மருத்துவர் மில்ராய் நானயக்காரா
பிள்ளைகள்2

கீந்தெனிய விதானரலலகே புண்யா கீந்தெனியா (Heendeniya Vidanaralalage Punya Heendeniya) (பிறப்பு 31 சூலை 1938) புண்யா கீந்தெனியா என பிரபலமாக அறியப்படும் இவர் தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் முன்னாள் இலங்கை இலங்கைத் திரை நடிகையாவார்.[1][2][3]

சொந்த வாழ்க்கை

[தொகு]

புண்யா கீந்தெனியா 31 ஜூலை 1938 அன்று இலங்கையின் மீரிகமையில் தனது பெற்றோரின் ஏழு குழந்தைகளில் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார்.[4] இவரது தந்தை எம். ஏ. கீந்தெனியா மீரிகமையில் நில உரிமையாளராகவும், தோட்டக்காரராகவும் இருந்தார். இவரது தாயார், டி. எல். ககாவிட்டகே பாணந்துறையைச் சேர்ந்தவர். புண்யா முதலில் மீரிகமை தொடக்கப் பள்ளியில் படித்தார். (தற்போது தத்லி சேனநாயக்கே கல்லூரி என்று அழைக்கப்படுகிறது). இவர் ஆறு வயதிற்குப் பிறகு ஆங்கில ஊடகத்தில் படிக்க மீரிகமை மகா வித்தியாலயத்திற்குச் சென்றார். மேலும் பள்ளி வலைப்பந்தாட்ட அணியின் உறுப்பினராகவும் இருந்தார்.[5]

இவர் டாக்டர் மில்ராய் நானயக்காரா என்பவரை மணந்தார். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். இவர்களுக்கு ஆறு பேரக்குழந்தைகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு, இவர் திரைத்துறையை விட்டு வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அவரது மகன் அனுபமா நானயக்கார ஒரு சிறப்பு மருத்துவராக உள்ளார். அனுபமா குழந்தையாக இருந்தபோது, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் அழைப்பின் பேரில் 1982 இல் இலங்கைக்கு வந்து "கலியுகயா " படத்தில் அகதா மற்றும் பியலின் மகனாக நடித்தார். புண்யாவின் மகள், பூர்ணமியும் ஒரு மருத்துவர்.[5]

தொழில்

[தொகு]

பள்ளி காலத்திலிருந்தே, இவர் நடனத்தில் சிறந்து விளங்கினார். புகழ்பெற்ற நடனக் கலைஞர் எஸ்.பனிபாரதாவின் கீழ் நடனம் கற்றுக் கொண்டார். பள்ளியில் பனிபாரதா நடத்திய பாலே திட்டி மங்களிகாவில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இர் தனது பள்ளியின் இசையாசிரியர் எஸ்.டி. டேவிட் அப்புகாமியின் கீழ் இசையையும் கற்றார். இவரது நடிப்பு மற்றும் இசை திறமைகளுக்காக, கல்லூரி முதல்வர் கே. ஏ. பன்னரத்ன உதவினார். பனிபாரதா, சிறிசேனா விமலவீராவின் அசோகா படத்தில் ஒரு நடனக் காட்சியை இவருக்கு வழங்கினார்.[5]

திரைப்பட தயாரிப்பு வழக்கறிஞர் சோமரத்னே புண்யாவை தமிழ் இயக்குநர் இராமச்சந்திரனுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் தங்களது 'கேத்ரீனா' படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை இவருக்கு அளித்த்தனர். இந்த படம் மிகவும் பிரபலமானது. மேலும் இவரது திரை வாழ்க்கையில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. பிறகு, சிறீ 296 மற்றும் சுனிதா ஆகிய படங்களில் நடித்தார். இந்தப் படங்களின் படப்பிடிப்பு இந்தியாவில் நடந்தது. பின்னர் 1961 ஆம் ஆண்டில் குருலு பெத்தா என்ற திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர், சிகுரு தருவா என்ற படத்தில் நடித்தார்.[5]

சிகுரு தருவா என்ற படத்தின் தயாரிப்பாளர் ஜோன் அமரதுங்கா , புண்யாவைத் தேடி வந்து, லெஸ்டர் ஜேம்ஸ் பிரீஸ் இயக்கத்தில் கேம்பெரலியா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை இவருக்கு வழங்கினார்.[5] திரைப்படத்தில் இவரது பாத்திரத்திற்காக விமர்சகர்களால் பாராட்டப்பட்டார். மேலும் பல விருதுகளையும் பெற்றார். 1968 ஆம் ஆண்டில், ரன்சலு படத்தில் நடித்ததற்காக 5 வது சரசவியா விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.[6] இவர் 1968 இல் நடிப்பை கைவிட்ட போதிலும், இவரது தொழில் வாழ்க்கையின் உச்சத்தில், இவர் 1983 இல் கலியுகயா திரைப்படத்தில் மீண்டும் தோன்றினார். அதற்காக இவர் ஜனாதிபதி திரைப்பட விருதைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டு யு. டபிள்யூ சுமதிபாலா நினைவு விருதைப் பெற்றார்.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Punya Heendeniya (de Silva), the evergreen silver screen star" இம் மூலத்தில் இருந்து 16 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121016152856/http://www.sundayobserver.lk/2008/08/17/spe07.asp. 
  2. http://www.lemonde.fr/cinema/article/2009/05/05/gamperaliya-changement-au-village-un-grand-cineaste-est-ne-en-1963_1189121_3476.html
  3. http://sundaytimes.lk/080406/FunDay/heritage.html
  4. "Punya Heendeniya career". Sarasaviya. Archived from the original on 20 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 November 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Mirigama Beauty Punya Heendeniya who polished Sinhala cinema". Silumina. பார்க்கப்பட்ட நாள் 2021-06-07. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  6. "Road to Prestige 1964-2018". Sarasaviya. பார்க்கப்பட்ட நாள் 2021-01-10. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help)
  7. "ITN bags highest number of Awards at Sumathi Awards Nite". ITN News. Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2021-09-19.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புண்யா_கீந்தெனியா&oldid=4162630" இலிருந்து மீள்விக்கப்பட்டது