உள்ளடக்கத்துக்குச் செல்

புகழிமலை முருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புகழிமலை முருகன் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கரூர்
அமைவு:வேலாயுதம்பாளையம், கரூர்
கோயில் தகவல்கள்
மூலவர்:முருகன்

புகழிமலை முருகன் கோயில் இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலின் முதன்மைக் கடவுள் முருகன் ஆவார். காவேரி ஆற்றங்கரையின் தென் பகுதியில் உள்ள ஆறு கிராமங்களுக்குச் சொந்தமானதாக இருந்ததால் புகழிமலை, ஆறுநாட்டார் மலை என்ற சிறப்பினைப் பெற்றதாகக் கருதப்படுகிறது. கரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ள புகழூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் 315 படிக்கட்டுகள் கொண்ட மலை மீது அமைந்துள்ளது.[1][2]

திறக்கும் நேரம்

[தொகு]
  • காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை
  • மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை

பூசை காலங்கள்

[தொகு]

இரண்டு கால பூசைகள் நடைபெற்று வருகின்றன.

  1. உச்சி காலம் 12 மணி
  2. சாயரட்சை 6 மணி

திருவிழா

[தொகு]

வைகாசி விசாகம், ஆனி மூலம், திருக் கார்த்திகை தீபத் திருவிழா, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. தைப்பூச திருத்தேர் திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புகழிமலை_முருகன்_கோயில்&oldid=3722069" இலிருந்து மீள்விக்கப்பட்டது