பீட்ரிஸ் ஃபின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்ரிஸ் ஃபின்
பீட்ரிஸ் ஃபின் 2016 இல்.
பிறப்புBeatrice Fihn
1982 (அகவை 40–41)
சுவீடன், கோடேபர்

பீட்ரிஸ் ஃபின் (Beatrice Fihn, (பிறப்பு 1982) என்பவர் சுவீடனைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் 2014 சூலை 1 முதல் பன்னாட்டு அணு ஆயுத ஒழிப்பு பிரசார குழுவின் (ஐகேன்) இயக்குநராக உள்ளார். ஐகேன் அமைப்பு 2017 ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசைப் பெற்றது.

வாழ்க்கை[தொகு]

பீட்ரிஸ் ஃபின் 2008 இல் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழகத்தில் சர்வதேச உறவுகள் புலத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். அவர் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே போர் நிறுத்தத்தில் பெண்களின் சக்தி (WILPF) என்ற அமைப்பில் இணைந்து பணியாற்றினார். அங்கு ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நடவடிக்கைகள் பற்றி அறிந்துகொண்டதுடன், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் வேலைகளில் ஈடுபட்டார். பிறகு சில காலம் வங்கியில் பணியாற்றிவிட்டு, லண்டன் பல்கலைக் கழக கல்லூரியில் சர்வதேசச் சட்டப் புலத்தில் முதுநிலைச் சட்டம் படித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்ரிஸ்_ஃபின்&oldid=3563859" இருந்து மீள்விக்கப்பட்டது