பீட்டர் மிச்சாலிக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீட்டர் மிச்சாலிக்கு
நாடு சிலவாக்கியா (2016வரை)
 செக் குடியரசு (2016 முதல்)
பிறப்புசெப்டம்பர் 15, 1990 (1990-09-15) (அகவை 33)
பிரிவித்சா, செக்கோசிலோவாக்கியா
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2011)[1]
பிடே தரவுகோள்2568 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2605 (செப்டம்பர் 2020)

பீட்டர் மிச்சாலிக்கு (Peter Michalik) செக்கோசிலோவாக்கியா நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க விளையாட்டு வீரராவார். 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பிடே அமைப்பு 2011 ஆம் ஆண்டு இவருக்கு கிராண்டுமாசுட்டர் பட்டத்தை வழங்கியது.

சதுரங்க வாழ்க்கை[தொகு]

மிச்சாலிக்கு தனது 5 ஆவது வயதில் சதுரங்கம் விளையாடத் தொடங்கினார். குரோசியா புல்டாக்சு என்ற அணிக்காக இவர் விளையாடினார்.[2]

2012 ஆம் ஆன்டு சூன் மாதத்தில் மிச்சாலிக்கு 17/17 என்ற முழுமையான புள்ளிகளை எடுத்து தனிநபர் சிலோவாக்கிய சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.[3]

2012 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் குரோனிங்கன் சதுரங்கப் போட்டியில் மிச்சாலிக்கு ஆரம்பத்தில் முன்னிலை பெற்றார் என்றாலும் முடிவில் கூட்டாக 5 ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார்.[4][5]

டிசம்பர் 2017 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் ஐரோப்பிய அதிரடி சதுரங்கப் போட்டியில் வெற்றியாளர் செர்கி கிகல்கோவுக்குப் பின்னால் லூக் மெக்சேனுடன் மிச்சாலிக்கு கூட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.[6]

மிச்சாலிக்கு 2023 சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் போட்டியிட்டார். அங்கு இவர் முதல் சுற்றில் இவான் இவானிசெவிச்சிடம் போட்டியிட்டு தோற்றார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "FIDE Title Application (GM)" (PDF).
  2. "1 PETER MICHALIK".
  3. "GM PETER MICHALIK WON THE INTERNATIONAL INDIVIDUAL SLOVAK CHESS CHAMPIONSHIP-BLITZ'2012" (PDF). June 25, 2012.
  4. "Andriasian 4th after Groningen Chess Fest round 4". December 24, 2012.
  5. "Groningen Open Tournament".
  6. Souleidis, Georgios (December 18, 2017). "Surprise winners of the European Rapid and Blitz".
  7. "FIDE World Cup 2023: Preliminary lists of eligible players announced".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_மிச்சாலிக்கு&oldid=3861777" இலிருந்து மீள்விக்கப்பட்டது