பீட்டர் பார்மர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேராசிரியர்

இராயல் வேதியியல் கழக உறுப்பினர், பட்டய வேதியியலாளர்
பிறப்பு1947 (அகவை 76–77)
தேசியம்பிரித்தானியர்
பணிநச்சியல்
பணியகம்
  • மருத்துவ ஆராய்ச்சி மன்றம், ஐக்கிய இராச்சியம்
  • இலெய்செசுட்டர் பல்கலைக்கழகம்

பீட்டர் பார்மர் (Peter Farmer) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த நச்சு இயல் வல்லுநர் ஆவார். இவர் 1947 ஆம் ஆண்டு பிறந்தார். இராயல் வேதியியல் கழக உறுப்பினராகவும் பட்டய வேதியியலர் என்ற சிறப்பையும் பெற்றிருந்தார்.

பீட்டர் பார்மர் தனது ஆரம்பகால வாழ்க்கையின் பெரும்பகுதியை மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் நச்சியல் பிரிவில் ஓர் ஆராய்ச்சியாளராக செலவிட்டார். 2002 ஆம் ஆண்டில் இலீசெசுட்டர் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் உயிரியக்கவியல் மற்றும் நோய்த் தடுப்பு வெளிப்புற அறிவியல் பணியாளர்கள் குழுவின் இணை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இலீசெசுட்டரில் உயிர்வேதியியல் மற்றும் புற்றுநோய் ஆய்வுகளில் கெளரவப் பேராசிரியராகவும் பீட்டர் பார்மர் இருந்தார், ஓய்வுபெற்ற பின்னரும் கூட பீட்டர் பார்மர் ஒரு கௌளரவ பேராசியராகவே இருந்தார்.[1]

2001 ஆம் ஆண்டு முதல் உணவு, நுகர்வோர் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழலில் இரசாயனங்களின் பிறழ்வுத்தன்மை குறித்த அரசாங்க ஆலோசனைக் குழுவின் தலைவராகப் பீட்டர் பணியாற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Staff list" (in ஆங்கிலம்). University of Leicester. பார்க்கப்பட்ட நாள் 20 June 2017.

புற இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_பார்மர்&oldid=3532635" இலிருந்து மீள்விக்கப்பட்டது