பீட்டர் நினோவ்
தோற்றம்
| பீட்டர் நினோவ் | |
|---|---|
| தேசியம் | பிரித்தானியா |
| துறை | பனியியல் |
| பணியிடங்கள் | எடின்பர்க்கு பல்கலைக்கழகம் |
பீட்டர் நினோவ் (Peter Nienow) இசுக்காட்லாந்து நாட்டிலுள்ள எடின்பர்க்கு பல்கலைக்கழகத்தில் பனியியலில் பேராசிரியராக உள்ளார்.[1] எடின்பர்க்கு இராயல் கழகத்தின் உறுப்பினரான இவரது ஆராய்ச்சி பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகள் காலநிலை மாற்றத்திற்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பதில் கவனம் செலுத்துகிறது. இலெய்டன் பார்க் பள்ளி மற்றும் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார்.
துருவப் பகுதிகளைப் பற்றிய அறிவைப் பெற்றதற்காகவும் தீவிர துன்பங்களுக்கு இடையில் துருவப் பயணங்களை மேற்கொண்டவர்களுக்காகவும் பிரித்தானியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் துருவப் பதக்கம் இவருக்கு வழங்கப்பட்டது.[2]
விருதுகள்
[தொகு]2019 ஆம் ஆண்டு பீட்டர் நினோவுக்கு எடின்பர்க் இராயல் கழகத்தின் உறுப்பினர் தகுதி வழங்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Profile". The University of Edinburgh.
- ↑ "Scientist wins royal award for work in Arctic". BBC News. 2017-01-23. Retrieved 2021-06-04.
- ↑ "Professor Peter William Nienow FRSE". The Royal Society of Edinburgh (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2019-03-15. Retrieved 2019-03-15.