உள்ளடக்கத்துக்குச் செல்

பீட்டர் எரிக்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீட்டர் எரிக்சன் (Peter Eriksson) சுவீடன் நாட்டைச் சேர்ந்த குருத்தணு மூளை நரம்பியல் மருத்துவராவார். இவர் 1959 ஆம் ஆண்டு சூன் மாதம் 5 ஆம் நாள் பிறந்தார். முதியோர்களின் மனித மூளையின் பின்புற மேட்டில் நிகழும் நரம்பணு ஆக்கம் குறித்த அடிப்படை ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் என்பதற்காக எரிக்சன் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டார். முதிர்ச்சியடைந்த மனித மூளையின் பின்புற மேட்டில் நரம்பு செல்கள் உருவாகின்றன என்பதை எரிக்சன் 1998 ஆம் ஆண்டில் நிருபித்தார்.[1]. மனித ஆயுட்காலம் முழுவதும் புதிய மூளை செல்கள் உருவாக்கப்படுகின்றன என்பதையும், அப்புதிய மூளை செல்களை மூளையுடன் ஒருங்கிணைப்பது சுற்றுச்சூழல் வழங்கும் தூண்டல்களைப் பொறுத்தது என்பதையும், இதனால் நரம்பு சேதமடைந்த நோயாளிகளுக்கு சிகிச்சையை மேம்படுத்தக்கூடிய ஒரு நுண்ணறிவு வழங்கப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

நரம்பணு ஆக்கத்தின் பொறிமுறையையும் எரிக்சன் விளக்கினார். அல்சைமர் நோய் உட்பட பலவிதமான நரம்பியல் நோய்களுக்கு எதிர்காலத்தில் சிகிச்சை அளிக்க முடியும் என்ற நம்பிக்கையை இவர் அளித்தார்.

2007 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 2 ஆம் நாளில் எரிக்சன் காலமானார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Eriksson, PS; Perfilieva, E (1998). "Neurogenesis in the adult human hippocampus". Nature Medicine 4 (11): 1313–7. doi:10.1038/3305. பப்மெட்:9809557. 
  2. Göteborgs-Posten பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம், Worldknown neuroscientist dead (Swedish)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_எரிக்சன்&oldid=3862398" இலிருந்து மீள்விக்கப்பட்டது