பீச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பீச்சி (BeeChi) என்கிற புனைபெயரால் அழைக்கப்படும் ராயாசம் பீமசேன ராவ் (1913-1980), கன்னட மொழியில் நன்கு அறியப்பட்ட நகைச்சுவையாளர் ஆவார். அவர் கர்நாடகாவின் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா என்றும் அழைக்கப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

பீச்சி, 1913இல், இந்திய மாநிலமான, கர்நாடகத்திலுள்ள பெல்லாரி மாவட்டத்தில் இருக்கும் ஹரபனஹல்லியில் பிறந்தார். இவரது தந்தை சீனிவாச ராவ், தாய் பாரதம்மா ஆவர். இவர், எஸ்.எஸ்.எல்.சி.க்குப் பிறகு படிப்பை நிறுத்திவிட்டு, அரசாங்க அலுவலகத்தில் ஒரு உதவியாளராக சேர்ந்தார். [1] பின்னர் இவர் சிஐடிக்கு கணிசமான நேரம் பணியாற்றினார். இவர் சீதாபாயை மணந்தார்.

முயற்சி[தொகு]

இவர், கன்னடத்தையோ அல்லது அதன் இலக்கியங்களையோ முறையாக படிக்கவில்லை. ஒரு நீண்ட ரயில் பயணத்தில் ஏ.என். கிருஷ்ணா ராவின் நாவலான சந்தியராகா (சத்யராகா) நாவலைப் படித்தபின் பீச்சி கன்னட இலக்கியத்தை நோக்கி உந்துதல் பெற்றார். ஏ.என்.கிருஷ்ண ராவை தனது குருவாக அவர் கருதினார். அந்த புத்தகத்தை படித்தபின், பீச்சிக்கு ஏற்பட்ட உணர்வுகள் அவரின் சொந்த வார்த்தைகளில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.:-

"இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி" பேப்பரின் மடிப்புகளுக்குள் புத்தகத்தை வைத்து சந்தியராகாவைப் படிக்க ஆரம்பித்தேன். நான் படிக்க ஆரம்பித்தேன் என்பது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது. என் கண்கள் எத்தனை முறை ஈரமாகிவிட்டன; எத்தனை முறை என் இதயம் துடித்தது என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால் புத்தகத்தை முழுமையாகப் படித்த பின்னரே நான் விழித்தேன். "

இலக்கியம்[தொகு]

பீச்சியின் எழுத்துக்கள் நகைச்சுவை அடிப்படையிலானவை. இவருடைய முதல் புதினமான தசகூட்டா, இவருக்கு 32 வயதாக இருந்தபோது வெளியிடப்பட்டது. தசகூட்டா என்பது ஒரு மனிதனின் (உமேஷ்) மேற்பரப்பில், அரசாங்க ஊழியர்களை ஊழலுக்கு அடிபணியச் செய்த கதை ஆகும். ஆனால் பழமைவாதத்திற்கு, ஆண்களின் பரந்த அடிமைத்தனத்துடன் தொடர்புடையது.

இந்த புதினத்தில், கதாநாயகன் தனது வாழ்க்கையில் பல துன்பங்களுக்கு ஆளாகிறான். ஊழல் மிகுந்த மேலதிகாரிகளின் கீழ் பணிபுரிகிறான். கதாநாயகனின் தந்தை, ஒரு இளம் பெண்ணை மறுமணம் செய்து கொள்கிறார். தனது மாற்றாந்தாய் இருக்கும் வீட்டில் இருக்கப் பிடிக்காமல், இறுதியில் சுபாஸ் சந்திரபோஸின் ("நேதாஜி") இந்திய தேசிய இராணுவத்தில் (ஐ.என்.ஏ ) சேருகிறான். மேலும், இப்புதினத்தில், கதாபாத்திரங்கள் கவனக்குறைவாக சிக்கலில் சிக்கிக் கொள்ளும் காட்சிகள் கதையில் புத்திசாலித்தனமாக உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, போஸின் இராணுவ அணிகளில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதால் சிறையில் இருந்து திரும்பிய பிறகு, உமேஷ் வீட்டில் அமர்ந்து காபி குடித்து கொண்டிருக்கும்போது, காபி, கசப்பாக இருப்பதைக் கண்டதும், கொஞ்சம் சர்க்கரை கேட்கிறான். அப்போது, மோகன்தாசு கரம்சந்த் காந்தி படுகொலை செய்யப்பட்டதாக செய்தி வருகிறது. கலகக்காரர்கள், அவனின் வீட்டிற்குள் நுழைகையில், உமேஷ் சர்க்கரை உட்கொள்வதைப் பார்க்கிறார்கள். உமேஷ் மகாத்மாவின் மரணத்தை கொண்டாடுகிறார் என்று நினைத்து, அவர்கள் உள்ளே ஒரு கோபத்தில் செல்கிறார்கள். புத்துணர்ச்சியூட்டும், அசல் மற்றும் தைரியமான இந்த புதினம், பீச்சிக்கு மிகவும் புகழ் அளித்தது. அதனால், இவர் இன்னும் அதிகமாக, பெரிய படைப்புகளை எழுதத் தொடங்கினார்.

இவரது கதைகளில் வரும் முதன்மை கதாபாத்திரம் டிம்மா ஆகும். (கன்னடத்தில் டிம்மா என்பது, மூடன் எனக் கருதப்படும் ஒரு மனிதரைக் குறிக்க பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படுகிறது). பீச்சி, தனது பெரும்பாலான கதைகளின் தலைப்பில் டிம்மா என்கிற சொல்லை பயன்படுத்தியுள்ளார். இவர், தனது வாழ்நாளில் சுமார் 60 புத்தகங்களை எழுதினார்.

சுயசரிதை[தொகு]

இவரது சுயசரிதை, நன்னா பயாகிராபி, வெளியானதும் சில சர்ச்சைகளை சந்தித்தது. நன்னா பயாகிராபி என்பது பீச்சியின் மிகச் சிறந்த தத்துவ படைப்பாகும். இதில், இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை தேவையான அளவிற்கு விரிவாகக் கூறியுள்ளார். இதனால், இதை படிக்கும் வாசகருக்கு, வேடிக்கை, தூண்டுதல், மனச்சோர்வு மற்றும் இறுதியில் அறிவூட்டுவதாக அமைந்துள்ளது. பல வழிகளில், இது சிறந்த சுயசரிதையாக பார்க்கப்படுகிறது.

இதில், தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் அனுபவித்த வேதனையான இழப்புகள் மற்றும் இவருக்கு ஏற்பட்ட விரும்பத்தகாத அனுபவங்களை, இவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதியிருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுத் தந்தது. பீச்சி ஒருபோதும் தனது கசப்பான வாழ்க்கையைப் பற்றி கசப்பாக சொன்னது இல்லை. இவரது தொனி சகிப்புத்தன்மை, மன்னிப்பு மற்றும் புரிதல் ஆகியவற்றில் ஒன்றாக உள்ளது. இவரது புத்தகத்தில் உள்ள நகைச்சுவை ஒருபோதும் கட்டாயப்படுத்தப்படுவதில்லை. ஒருபோதும் மோசமானதாகவோ அல்லது பொருத்தமற்றதாகவோ இல்லை.

பீச்சி ஒரு ஆரம்ப அத்தியாயத்தில், தனது கிராமத்தின் இளம்வயது சிறுவர்கள் அனைவரும் அருகிலுள்ள ஒரு மலைக்குச் சென்று சுயஇன்பத்தில் ஈடுபடுவார்கள் என்பதை விவரிக்கிறார். மற்றொன்றில், கிராமத்தின் ஒரு வயதான விதவை தனது விதவை மகளை ஒரு இளம் பீச்சியை கவர்ந்திழுக்க முயற்சிப்பதை விவரிக்கிறார். மேலும், அந்த சூழ்நிலையிலிருந்து அவர் எவ்வாறு தப்பித்தார் என்பதையும் விளக்கியுள்ளார். இந்த இரண்டு சம்பவங்களும் நகைச்சுவையுடன் எழுதப்பட்டுள்ளன. மற்றும் மகிழ்ச்சிகரமான வாசிப்பை உருவாக்குகின்றன; இது அனைத்தையும் பார்த்த மற்றும் வாழ்க்கை என்னவாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட ஒரு மனிதரிடமிருந்து இச் செய்திகள் வருகிறது என்கிற கருத்து படிக்கும் வாசகருக்கு ஏற்படுகிறது. இந்த புத்தகத்தின் கடைசி பத்தி, இவரது வாழ்க்கை குறித்த தத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. A brief biography about Beechi is mentioned by "Bhoomika to re-chew Beechi jokes". Greynium Information Technologies Pvt. Ltd.. மூல முகவரியிலிருந்து 30 September 2007 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீச்சி&oldid=2887908" இருந்து மீள்விக்கப்பட்டது