பீகார் உத்சவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீகார் உத்சவ் என்பது இந்தியாவின் டெல்லியில் உள்ள டில்லி ஹாட்டில் பீகாரின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்த பீகார் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலாச்சார விழா ஆகும். [1] [2] பீகார் நிறுவன தினம் 2010 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், பீகார் அரசின் தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ,மற்றும் ஏப்ரல் மாதங்களில் புது டெல்லியில் 31 நாட்கள் பீகார் உத்சவ் - கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது.

பீகார் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் திருவிழாவின் போது கண்காட்சி மற்றும் விற்பனை செய்யப்படுகின்றன. பீகாரின் செழுமையான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் பல கலாச்சார நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. [3]

பாகல்புரி பட்டு, மதுபானி ஓவியங்கள், மூங்கில் கைவினைப்பொருட்கள், சணல் கைவினைப் பொருட்கள், திக்குலி கலை, சிக்கி பொருட்கள், நல்நாடாவின் பான்ஸ் பிகா கிராமத்தின் கைத்தறி படுக்கை விரிப்புகள், மர கைவினைப் பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள் என பீகாரின் கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தும் மற்றும் விற்கும் கடைகள் இவ்விழாவின் முக்கிய ஈர்ப்புகளாகும். டெல்லி குடியிருப்பாளர்களிடமிருந்து ஒவ்வொரு வருடமும் கிடைக்கும்  நேர்மறையான வரவேற்பால் பீகாரின் கைவினைஞர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்து கலந்து கொள்கின்றனர்.

பீகாரின் கைவினைஞர்களால் தயாரிக்கப்பட்ட பீகாரின் கைவினை மற்றும் கைத்தறி பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை, பீகாரின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை காட்சிப்படுத்த உதவுகிறது. பீகார் உத்சவ், பீகாரின் கைவினைஞர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை இந்திய தேசிய தலைநகரில் காட்சிப்படுத்த ஒரு புதிய வாய்ப்பை வழங்கி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bihar Diwas celebrations in full swing | Millennium Post". millenniumpost.in. Archived from the original on 30 July 2016. பார்க்கப்பட்ட நாள் 6 June 2022.
  2. "Bihar Utsav in Delhi NCR, Dilli Haat - What's Hot". Whats Hot. Archived from the original on 2016-01-28.
  3. poststaff. "Bihar's Famous Bangles with Madhubani painting, wodden art, Ladies kurties, Tasher Silk Sarees and Stoles is becoming a huge hit in Bihar Utsav 2016 - Teen News 1". www.teennews1.com. Archived from the original on 2018-07-14. பார்க்கப்பட்ட நாள் 2016-03-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீகார்_உத்சவ்&oldid=3663438" இலிருந்து மீள்விக்கப்பட்டது