பி. வி. ராகவலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.வி.ராகவுலு

பி. வி. ராகவலு (B. V. Raghavulu) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2014-ல் ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படும் வரை இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்டு) ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலக்குழுவின் கடைசி செயலாளராக இருந்தார்.[1] தற்போது இவர் இக்கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் செயலாற்றி வருகிறார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ராகவலு ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்திலுள்ள பெதமபோடு என்ற கிராமத்தில், புன்னம்மா மற்றும் வெங்கட சுப்பய்யா ஆகியோருக்கு மகனாக பிறந்தார். கந்துகூரில் பள்ளீப்படிப்பை முடித்த பின்னர், ஆந்திர கிறிஸ்தவக் கல்லூரியில் இடைநிலை படிப்பை முடித்தார். அறிவியல் பட்டப்படிப்புக்காக பாப்டல வேளாண்மை கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் படிப்பை முடிக்க இயலவில்லை. பின்னர் அவர் தனது கலை இளங்கலை படிப்புக்காக காவாலி கல்லூரியில் சேர்ந்தார் என்றாலும் இறுதி ஆண்டு படிப்பின் போது நாட்டில் அவசரநிலை வரவே, கட்சியின் முழுநேர பணிகளுக்காக நெல்லூர் மாவட்டத்துக்கு சென்றார்.

குடும்ப வாழ்க்கை[தொகு]

ராகவலு இந்திய தொழிற்சங்க மையத்தின் ஆந்திரா மாநில துணைத் தலைவரும் அகில இந்திய ஜனநாயக மகளிர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான புண்யாவதியை திருமணம் செய்துகொண்டார். அவர்களின் ஒரே மகளின் பெயர் சுரூஜனா என்பதாகும். அவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தனது சக மாணவரான முகம்மது சஹீர் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தேசிய தேர்தல் கண்காணிப்பு". ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR). http://myneta.info/ap09/candidate.php?candidate_id=2540. 
  2. "சிபிஐ(எம்) இன் பி.வி. ராகவுலு, ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்றத்தாழ்வுகளுக்கு வாய்ப்பு இல்லாத வளர்ச்சி மாதிரியை ஆதரிக்கிறார்.". இந்து, விஜயவாடா பதிப்பு. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/bv-raghavulu-advocates-development-model-with-little-scope-for-inequalities-for-andhra-pradesh/article67393294.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._வி._ராகவலு&oldid=3811900" இலிருந்து மீள்விக்கப்பட்டது