பி. ஜி. வி. ஆர். நாயுடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்தகம்செட்டி கானா வெங்கட ரெட்டி நாயுடு
பிறப்பு09 மே,1969 (வயது 54)
கோபாலபட்டனம், விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம்
மற்ற பெயர்கள்கானா பாபு
கல்விஇளம் வணிகவியல்
பணிஅரசியல்வாதி மற்றும் தொழிலதிபர்
செயற்பாட்டுக்
காலம்
1994-தற்போது வரை

பி.ஜி.வி.ஆர். நாயுடு (P.G.V.R. Naidu) எனவும் அறியப்படும் பெத்தகம்செட்டி கானா வெங்கட ரெட்டி நாயுடு ஓர் இந்திய அரசியல்வாயாவார்.

இவர் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோபாலப்பட்டினத்தில் பிறந்தார். இவரது தந்தை பெ. அப்பலா நரசிம்மம், அனகப்பல்லி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராவார்.

சர்வதேச கைப்பந்தாட்ட வீரரான இவர் ஆந்திர பிரதேச கைப்பந்தட்டச் சங்கத்தின் தலைவராக இருந்தார். [1]

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் 1999 இல் பெந்துர்த்தி சட்டமன்றத் தொகுதியின் துரோணம்ராஜு சீனிவாச ராவை தோற்கடித்து உறுப்பினரானார். [2] 2009 இல், இவர் பிரசா ராச்யம் கட்சியில் சேர்ந்து, விசாகப்பட்டினம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் மல்லா விஜய பிரசாத்திடம் 4144 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். [3]

2014-ல் விசாகப்பட்டினம் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு தாடி ரத்னாகரை தோற்கடித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் 30,857 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். [4] 2019 ஆம் ஆண்டில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு மல்லா விஜய் பிரசாத்தை தோற்கடித்து 18,981 வாக்குகள் பெரும் பெரும்பான்மையுடன் வென்றார். [5] 2017 முதல் 2019 வரை அரசாங்க கொறடாவாகவும் பணியாற்றினார் [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. India, The Hans (2018-10-10). "National volley ball tourney from Oct 11" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-07.
  2. "Pendurthi Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Pendurthi, Andhra Pradesh". {{cite web}}: Missing or empty |url= (help)
  3. "Visakhapatnam West Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Visakhapatnam West, Andhra Pradesh". {{cite web}}: Missing or empty |url= (help)
  4. "Visakhapatnam West Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Visakhapatnam West, Andhra Pradesh". {{cite web}}: Missing or empty |url= (help)
  5. "Visakhapatnam West Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". {{cite web}}: Missing or empty |url= (help)
  6. Prakash, Om. "Government Whip Gana Babu and other VIPs prays at Tirumala – Tirumala Updates". {{cite web}}: Missing or empty |url= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜி._வி._ஆர்._நாயுடு&oldid=3823514" இலிருந்து மீள்விக்கப்பட்டது