பி. எம். பாட்டியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியாவின் குறிப்பிடத் தக்க பொருளாதார மேதைகளில் ஒருவர் பி. எம். பாட்டியா. லாகூர் டி.ஏ.வி.கல்லூரியில் படிப்பையும் 1938-ல் அங்கேயே ஆசிரியப் பணியையும் தொடர்ந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு டெல்லிக்கு வந்த பி.எம்.பாட்டியா, அங்கே இந்து கல்லூரியில் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். அங்கேயே முதல்வராகும் வரை உயர்ந்து சுமார் 25 வருடங்கள் பணி புரிந்தார். பிர்லா தொழில்நுட்ப அறிவியல் பயிலகத்தில் (BITS, PILANI) பொருளாதாரத் துறையின் தலைவராகவும் பணியாற்றி இருக்கிறார். ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொருளாதாரக் கமிட்டிகள் பலவற்றில் பங்கேற்றிருக்கிறார். இருபது புத்தகங்கள், நூற்றுக் கணக்கான ஆய்வுக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

2009 ஆகஸ்ட் 15 ஆம் நாள் நுரையீரல் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாட்டியா 2009 செப்டம்பர் 2-ஆம் நாள் தன்னுடைய 94 வயதில் உயிரிழந்தார்.

பாரதப் பிரதமரும் சிறந்த பொருளாதார மேதையுமான டாக்டர் மன்மோகன் சிங், திட்டக்குழு தலைவர் மாண்டேக்சிங் ஆலுவாலியா ஆகியோர் இவருடைய மாணவர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._எம்._பாட்டியா&oldid=2712211" இருந்து மீள்விக்கப்பட்டது