பி.புருசோத்தமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. புருசோத்தமன்
P. Purushothaman
புதுச்சேரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகச் செயலர்
பதவியில்
2014 – 2 நவம்பர் 2019
புதுச்சேரி சட்டப் பேரவை
பதவியில்
1985–1990
முன்னையவர்பி. சுப்பராயன்
பின்னவர்ஏ. பக்தவச்சலம்
தொகுதிஅரியாங்குப்பம்
பதவியில்
2011–2016
முன்னையவர்புதிய தொகுதி
பின்னவர்ஆர். கே. ஆர். அனந்தராமன்
தொகுதிமணவெளி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1948
இறப்பு2 நவம்பர் 2019 (வயது 71)
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

பி. புருசோத்தமன் (P. Purushothaman) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1948 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியைச் சேர்ந்தவராவார். புதுச்சேரி சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுச்சேரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

புருசோத்தமன் 1985 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அரியாங்குப்பத்தில் இருந்து புதுச்சேரி சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [1] 26 ஆண்டுகளுக்குப் பிறகு இவர் 2011 ஆம் ஆண்டில் மணவெளியிலிருந்து புதுச்சேரி சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [2] 2014 ஆம் ஆண்டு புதுச்சேரி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டார் [3]

புருசோத்தமன் செயலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஒரு மகன் மற்றும் ஐந்து மகள்கள் இருந்தனர்.

புருசோத்தமன் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதியன்று தனது 71ஆவது வயதில் காலமானார் [4] [5] [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pondicherry Assembly Election Results in 1985". பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
  2. "List of Winners in Puducherry 2011". பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
  3. "Puducherry MLA P. Purushothaman dies aged 71". பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
  4. "After wasp attack, ex-MLA dies of heart attack". 2 November 2019. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
  5. "Ex-MLA, AIADMK Puducherry state secretary Purushothaman dies". 2 November 2019. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
  6. "Former AIADMK MLA Purushothaman dies after being stung by wasp". 2 November 2019. பார்க்கப்பட்ட நாள் 3 November 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி.புருசோத்தமன்&oldid=3823847" இலிருந்து மீள்விக்கப்பட்டது