பிஷ்னோய் மக்கள்
குரு ஜாம்பேஷ்வர் |
---|
பிஷ்னோய் மக்கள் (Bishnoi People) 540 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தங்களின் ஆன்மிக குரு ஜாம்பேஷ்வர் என்ற ஜாம்பாஜி அருளிய 29 நன்னெறிகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்து வாழ்பவர்கள்.[1] ’பிஷ்’ எனும் சொல்லிற்கு இருபது என்றும் ’னோய்’ எனும் சொல்லிற்கு ஒன்பது என்றும் பொருள். தங்களின் ஆன்மிக குரு அருளிய 29 நன்னெறிகளில், தங்களின் அடிப்படை உடல் நலத்தை பேணி காத்திட 10 நன்னெறிகளும், நல்ல சமூக பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வாழ்ந்திட 7 நன்னெறிகளும், இறைவனை வழிபட 5 நன்னெறிகளும், கால்நடைகளை நன்கு வளர்த்தல், விலங்குகளை கொல்லாதிருத்தல், செடி, கொடி, மரங்களை அடியுடன் வெட்டாமல், இயற்கை சூழ்நிலையை காத்திட 7 நன்னெறிகளும் கடைப்பிடித்து வாழ்பவர்கள். தூய சைவ உணவை மட்டுமே உண்பவர்கள். பிஷ்னோய் மக்கள் இயற்கையின் நண்பர்கள்.[2]
மரங்களை காக்க உயிரை விட்ட மக்கள்
[தொகு]1731-ஆம் ஆண்டில், ராஜஸ்தான், மாநிலம், ஜோத்பூரிலிருந்து தென்மேற்கே 26 கி. மீ., தொலைவில் தார் பாலைவனத்தில் உள்ள கேஜர்லி (Khejarli) [3] என்ற கிராமத்தின் மரங்களை வெட்ட வந்த மார்வார் மன்னர் அபய் சிங்கின் ஆட்களை, அம்ருதாதேவியின் தலைமையில் பிஷ்னோய் பழங்குடி மக்கள் தடுத்து நிறுத்தியதால், 363 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மன்னரின் வீரர்களால் கொல்லப்பட்டனர்.[4][5]. இந்தச் சம்பவத்தின் உச்சக்கட்டமாக கி.பி.1730 ஆம் ஆண்டு பத்வா சூடி, செவ்வாய்கிழமை, 363 ஆண்களும் பெண்களும் வீரமரணம் அடைந்தனர்.[1]
அபூர்வ பழக்கம்
[தொகு]இந்த இனக்குழுக்களில் உள்ள பெண்களிடம் ஒரு வினோத பழக்கம் உள்ளது. அது தாய் மான் இறந்துவிட்டால் மான் குட்டிகளுக்கு இங்குள்ள பெண்களே தாய் பால் கொடுத்து மூன்று மாதங்கள் கழித்து காட்டில் விடுகிறார்கள்.[6] மேலும் ஆண்கள் தங்களின் நிலங்களில் பயிரிடும் பயிர்களில் கொஞ்சம் பயிர்களை அருவடை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ஒடிசா, மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இவர்கள் வாழுகிறார்கள்.[7]
காட்டையும், காட்டு விலங்கினங்களை பாதுகாத்தல்
[தொகு]பிஷ்னோய் மக்கள் காட்டையும், காட்டு விலங்குகளையும் நேசிப்பதில் சிறந்தவர்கள். கால்நடைகள் வளர்ப்பே தங்களின் தொழில். தங்கள் வாழும் பகுதிகள் சுற்றி திரியும் சிங்காரா வகை மான்கள், புள்ளிமான்கள், கலைமான்கள், காட்டெருமைகள், மயில்கள் போன்ற விலங்குகள் தங்களின் வேளாண் நிலங்களில் மேய்ந்தாலும், அதனை அடித்து விரட்டுவதில்லை. கடும் கோடைக்காலத்தில் காட்டு விலங்குகள் நீர் அருந்த வசதி செய்துள்ளனர்.
மும்பை திரைப்பட நடிகர் சல்மான் கான் மற்றும் செயிப் அலி கான் ஆகியோர் இங்குள்ள காட்டு மான்களை வேட்டையாடி கொன்ற காரணத்தால், இம்மக்கள் அவர்களுக்கு எதிராக கடும் எதிர்ப்பு காட்டினர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-10-03. பார்க்கப்பட்ட நாள் 2014-07-22.
- ↑ "The Desert Dwellers of Rajasthan – Bishnoi and Bhil people". 2004. Archived from the original on 16 டிசம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 19 Mar 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://www.fallingrain.com/world/IN/24/Khejarli_Gaon.html
- ↑ http://www.nativeplanet.org/indigenous/cultures/india/bishnoi/bishnoi.shtml பரணிடப்பட்டது 2019-12-16 at the வந்தவழி இயந்திரம் பிஷ்நொய் மக்கள்
- ↑ "29-Rules". http://www.bishnoisamaj.com. Archived from the original on 2 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 24 January 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); External link in
(help)|work=
- ↑ மானுக்குப் பாலூட்டும் பிஷ்னோய் இனப் பெண்கள்
- ↑ மரங்களையும் போற்றும் பிஷ்னோய்கள் தி இந்து தமிழ் 10 செப்டம்பர் 2016
8. பிஷ்னோய் இயக்கம்: அமிர்தா தேவி பிஷ்னோயின் தியாகம்
வெளி இணைப்புகள்
[தொகு]- இயற்கையை வணங்கும் பிஷ்னோய் மக்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் பி பி சியின் புகைப்படங்கள்
- பிஷ்னோய் மக்கள் பரணிடப்பட்டது 2019-12-16 at the வந்தவழி இயந்திரம்
- பிஷ்னோய் மக்களின் புகைப்படங்கள்
- பிஷ்னோய் மக்கள்-காணொலி காட்சி
மேலும் படிக்க
[தொகு]- "Temple Profile: Mandir Shri Jambho J". Government of Rajasthan. Archived from the original on 19 September 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-07-27.
- Jambhoji: Messiah of the Thar Desert,1998, author M.S.Chandla
- Chandla, M. S. (2001). The Bishnois: Wildlife Protection - An Article of Faith (PDF). Aurva Publications.