பில் நாக்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பில் நோட்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பில் நாக்டன்
தொழில் எழுத்தாளர், புதினவியலாளர் மற்றும் நாடகாசிரியர்
இலக்கிய வகை புதினம்

வில்லியம் ஜான் பிரான்சிஸ் நாக்டன் (William John Francis Naughton, or Bill Naughton) (சூன் 12, 1910சனவரி 9, 1992) ஐரிய - பிரித்தானிய எழுத்தாளர் மற்றும் நாடகாசிரியர் ஆவார். ஆல்ஃபி எனும் நாடகத்தின் மூலம் பரவாலாக அறியப்படுகிறார்.[1] இவரின் பதினேழு ஆரஞ்சுப்பழங்கள் எனும் சிறுகதை தமிழக அரசின் பாடப்புத்தக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

நாக்டன் பல்லுயுனிசில் வறுமையான குடும்பத்தில் பிறந்தார், (அயர்லாந்து)பிறந்தார். பின் தனது சிறுவயதிலேயே 1914 இல் இங்கிலாந்து, லங்காசயர், போல்டனுக்குச் சென்றார்.[2] இவர் அங்குள்ள புனித பீட்டர் மற்றும் பால் பள்ளியில் பயின்றார். எழுத்துப் பணியைத் துவங்குவதற்கு முன்பாக நெசவாளர், நிலக்கரி தோண்டுபவர், மற்றும் சுமையுந்து ஓட்டுநராகவும் பணிபுரிந்துள்ளார்.[1]

விருதுகள்[தொகு]

 • திரைக்கதை எழுத்தாளர்களுக்கான கையேடு விருது (1967 மற்றும் 1968)
 • வானொலி நாடத்திர்கான இத்தாலிய விருது (1974)
 • குழந்தைகள் உரிமைகள் பட்டறை விருது (1978)
 • போர்டிகோவின் இலக்கியத்திற்கான விருது (1987)

இலக்கியப் படைப்புகள்[தொகு]

நாடகம்[தொகு]

 • எனது சதை, எனது இரத்தம் (1957)
 • ஆல்பி (1963)
 • சூலை மாத மாலை நேரம் (19660
 • அன்னியும் ஃபேன்னியும் (1967)
 • டெர்பி நாள் (1994)

சிறுகதை[தொகு]

 • பதினேழு ஆரஞ்சுப்பழங்கள்[3]
 • உண்மையான நல்ல சிரிப்பு

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 Glenn Collins (11 January 1992). "Bill Naughton, 81, a British Playwright Who Created 'Alfie'". New York Times. பார்த்த நாள் 19 June 2012.
 2. "Bolton Museums - Bill Naughton" (27 January 2010).
 3. A Goalkeeper's revenge and other stories, archived from the original on 13 March 2012, retrieved 27 January 2012 Cite uses deprecated parameter |deadurl= (help)

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_நாக்டன்&oldid=2714995" இருந்து மீள்விக்கப்பட்டது