பில்லா (1980 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்லா
இயக்கம்ஆர்.கிருஷ்ணமூர்த்தி
இசைஎம்.எஸ்.விஸ்வநாதன்
நடிப்புரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி
வெளியீடு1980
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பில்லா (Billa) 1980 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படமாகும். ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். 1978ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஹிந்தித் திரைப்படமான டொன் எனும் திரைப்படத்தைத் தழுவியே இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது. ஆயினும் திரைக்கதையில் தமிழ்த் திரைப்பட இரசிகர்களுக்கு ஏற்றவகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன.

பாத்திரங்கள்[தொகு]

பாடல்கள்[தொகு]

எம் எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1][2] மை நேம் இஸ் பில்லா, வெத்தலய போட்டேன்டி பாடல்கள், 2007 ஆவது ஆண்டில் வெளியான பில்லா 2007 திரைப்படத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டன.[3][4][5]

எண் பாடல் பாடலாசிரியர் பாடகர்(கள்) காலம்
1 "மை நேம் இஸ் பில்லா" கண்ணதாசன் எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:26
2 "இரவும் பகலும்" மலேசியா வாசுதேவன், வாணி ஜெயராம் 04:39
3 "வெத்தலயப் போட்டேன்டி" மலேசியா வாசுதேவன் 04:48
4 "நாட்டுக்குள்ள எனக்கொரு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:38
5 "நினைத்தாலே இனிக்கும் சுகமே" எல். ஆர். ஈசுவரி 04:23

வரவேற்பு[தொகு]

இப்படத்தின் பின்னணி இசையும் பாடல்களும் மிக அருமையாக அமைந்தது என பிரைடேமூவிஸ் விமர்சித்தது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Billa(1980) Soundtrack". MusicIndiaOnline. Archived from the original on 2011-03-19. பார்க்கப்பட்ட நாள் 2012-02-29.
  2. "Billa (Old) Songs". Raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2012-02-29.
  3. "Remix song in Billa". IndiaGlitz. 1 June 2007. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
  4. "Billa's music rocks!". Rediff.in. 2007-11-29. Archived from the original on 2013-04-12. பார்க்கப்பட்ட நாள் 2013-05-02.
  5. "Billa Music Review Music Director Yuvan Shankar Raja Vishnuvardhan Audio Release Ajithkumar Nayanthara Namitha Vijay Yesudas Shankar Mahadevan Stills Picture Image Gallery". Behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 2013-05-02.
  6. "Read Billa movie review". FridayMoviez. 26 January 1980. Archived from the original on 2012-03-26. பார்க்கப்பட்ட நாள் 2012-08-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லா_(1980_திரைப்படம்)&oldid=3946017" இலிருந்து மீள்விக்கப்பட்டது