பிரையார்டைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரையார்டைட்டு
Briartite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCu2(Fe,Zn)GeS4
இனங்காணல்
படிக அமைப்புநாற்கோணகம்
இரட்டைப் படிகமுறல்இணை மேற்பரப்பு
மோவின் அளவுகோல் வலிமை3½ - 4½
மிளிர்வுஉலோகம்; மெருகூட்டப்படாதது
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
ஒப்படர்த்தி4.337 (Calculated)
அடர்த்தி4.337 கி/செ.மீ3 (கணக்கிடப்பட்டது)
பொதுவான மாசுகள்Ga, Sn

பிரையார்டைட்டு (Briartite) என்பது ஓர் ஒளிபுகாத அடர்-சாம்பல் நிற உலோக சல்பைடு கனிமமாகும், Cu2(Zn,Fe)GeS4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது அடையாளப்படுத்தப்படுகிறது. மற்ற செருமேனியம்-காலியம்-சல்பைடுகள் போல இக்கனிமத்தில் காலியம் மற்றும் வெள்ளீயத்தின் சுவடுகள் காணப்படுகின்றன.[1]

1965 ஆம் ஆண்டு காங்கோ நாட்டின் பிரின்சு இலியோபோல்டு சுரங்கத்தில் பிரையார்டைட்டு கண்டறியப்பட்டது. தற்போது இச்சுரங்கம் கிப்புசி சுரங்கம் என்று அழைக்கப்படுகிறது. பிராங்கோட்டு மற்றும் பலர் சேர்ந்து இதை கண்டறிந்தனர். கிப்புசி சுரங்கத்தை ஆய்வு செய்த காசுடன் பிரையார்டின் பெயர் இக்கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.[2]

நமீபியா, கிரீசு மற்றும் எசுப்பானியா நாடுகளிலும் பிரையார்டைட்டு கனிமம் காணப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Briartite". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09.
  2. "New Mineral Names" (PDF). Mineral Society of America. Archived (PDF) from the original on 2012-07-23. பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.
  3. "Briartite" (PDF). Handbook of Mineralogy. Archived (PDF) from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 9 February 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரையார்டைட்டு&oldid=3383131" இலிருந்து மீள்விக்கப்பட்டது