பிரேசினைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேசினைட்டு
Brezinaite
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுCr3S4
இனங்காணல்
நிறம்சாம்பல் பழுப்பு, சாம்பல்
படிக அமைப்புஒற்றை சரிவு
மோவின் அளவுகோல் வலிமை3.5-4.5
மிளிர்வுஉலோகத்தன்மை -மங்கலாக
ஒளிஊடுருவும் தன்மைOpaque
ஒப்படர்த்தி4.12
மேற்கோள்கள்[1][2]

பிரேசினைட்டு (Brezinaite) Cr3S4 என்ற என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். 1969 ஆம் ஆண்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. குரோமியம் மற்றும் கந்தகம் தனிமங்களால் ஆன ஓர் அரிய கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. டக்சன் ரிங் விண்கல் போன்ற விண்கற்களில் இது காணப்ட்டது, இதைத் தவிற இது நியூ பால்டிமோர் விண்கல் மற்றும் சிகோட்-அலின் விண்கல் ஆகியவற்றிலும் பிரேசினைட்டு காணப்பட்டது. ஆத்திரியாவின் வியன்னாவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கனிமவியல்-பாறையியல் பிரிவின் கடந்தகால இயக்குநரான அரிசுடைட்சு பிரேசினாவின் (1848-1909) நினைவாக பிரேசினைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரேசினைட்டு&oldid=3746225" இலிருந்து மீள்விக்கப்பட்டது