பிரித் கொட்டுவ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரித் கொட்டுவ
பிரித் கொட்டுவ
பிரித் கொட்டுவ

இலங்கையில் பிரித் கொட்டுவ எனப்படுவது பௌத்த சமய கலாசாரத்துடன் இணைந்த ஒரு விடயமாகும். பௌத்த மக்கள் பிக்குகள் வேதம் ஓதுவதற்காக பிரித் கொட்டுவைகளை அமைப்பர். விசேடமாக புதிய வீடுகள் கட்டி கிரகப் பிரவேசம் செய்யும் வேளைகளில், இறந்தவருக்காக வேண்டி மூன்று மாதங்கள், ஒரு ஆண்டு போன்ற காலங்களில் அவரின் ஆத்ம சாந்திக்காக சிறப்பு வழிபாடு செய்யும் வேளைகளில் பௌத்த மக்கள் இத்தகைய பிரித் வைபவங்களை நடத்துவர். மேலும் பௌத்த முக்கியத்துவமிக்க தினங்களிலும் இத்தகைய வைபவங்கள் நடத்தப்படுவதுண்டு.

பிரித் கொட்டுவ அமைப்பு[தொகு]

பிரித் கொட்டுவ மரபு ரீதியான முறைகளில் கலைத்துவ அலங்காரமிக்க கூடாக அமைக்கப்படும். இதனை அமைப்பதற்கு குருத்தோலைகள் வாழை மரங்கள் மற்றும் இயற்கையான பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படும். நவீன காலத்தில் வெள்ளைநிற திசுத் தாள்களால் அலங்கார வேலைப்பாடுகள் செய்வர். இந்த பிரித் கொட்டுவ சதுர வடிவில் அல்லது அறுகோண அல்லது எண்கோண வடிவில் அமைக்கப்படும்.

பிரித் கொட்டுவ அமைக்கப்படும்போது அது மிகவும் கலைத்துவமிக்க முறையில் அமைக்கப்படும். இதனை அமைப்பதற்கு குறிப்பிட்ட கிராமத்தின் அல்லது பிரதேசத்தில் தேர்ச்சி பெற்ற வயதானவர்கள் பலருள்ளனர். இவர்கள் இதனை ஒரு மதக் கருமமாக நினைத்து சேவையாகவே செய்வர். தற்காலத்தில் புதிய தலைமுறையினருக்கும் இந்தக் கலை கற்றுக் கொடுக்கப்படுகின்றது.

பிரித் வைபவம்[தொகு]

பிரித் வைபவம் நடைபெறும்போது மதகுருமார் ஊர்வலமாக அழைத்துவரப்படுவர். இவ்வாறு அழைத்துவரும்போது அவர்களது பாரம்பரிய நடன இசை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்படும். பிரித் வைபவம் நடைபெறும்போது பௌத்த குருமார் இந்த பிரித் கொட்டுவையினுள் அமர்ந்த படியே வேதமோதுவர். பிரித் வைபவங்களில் வேதமோதும்போது இரவில் ஆரம்பித்து அடுத்த நாள் அதிகாலை வரை தொடர்ச்சியாக வேதமோதப்படும். இது பௌத்த மக்களின் ஒரு சமய நிகழ்ச்சியாகும். மரபு ரீதியான வழிமுறையாக இதுகால வரை பேணப்பட்டு வருகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்_கொட்டுவ&oldid=951944" இலிருந்து மீள்விக்கப்பட்டது