பிரித்திகா யாசினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரித்திகா யாசினி (சேலம் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) காவல்துறை அதிகாரி தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை ஆவார். இவர் ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். சான்றிதழ்களில் இருந்த பிரதீப் குமார் என்ற பெயரை பிரித்திகா யாஷினி என்று மாற்றிக் கொண்டவர்.

எழுத்துத்தேர்வு[தொகு]

சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது பிரித்திகா அதற்கு விண்ணப்பித்தார். திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது.[1] அந்த தேர்வில் கலந்து பிரித்திகா தேர்ச்சி பெற்றார்.

உடல்தகுதித்தேர்வு[தொகு]

எழுத்துத்தேர்வைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட உடல் தகுதி தேர்வில் 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீற்றர் ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து ஒரு நொடி காலதாமதமாக வந்ததாகக் கூறி சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார். தகுதி நீக்கமும் செய்யப்பட்டார். இதை எதிர்த்து பிரித்திகா மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார். வழக்கு விசாரணையில் இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட 100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்தியாவின் முதல் திருநங்கை போலிஸ் அதிகாரி தமிழகத்தில் நியமனம்|BBC Tamil நவம்பர் 5, 2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரித்திகா_யாசினி&oldid=2938096" இருந்து மீள்விக்கப்பட்டது