பிரிட்டன் விண்வெளி உயிரியல் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பிரிட்டன் விண்வெளி உயிரியல் சங்கம் (Astrobiology Society of Britain) ஐக்கிய இராச்சியத்தில் வானியல் அறிவியலுக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கற்றறிந்த சமூகமாகும். இந்த அமைப்பு நாசா விண்வெளி நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1]

இந்த சங்கம் முக்கியமாக ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த உறுப்பினர்களையும் பன்னாட்டு சர்வதேச உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. 2003 ஆம் ஆண்டில் கேம்பிரிட்சில் நடைபெற்ற இங்கிலாந்தின் முதல் விண்வெளி உயிரியல் மாநாட்டில், விண்வெளி உயிரியல் மன்றம் மற்றும் வலையமைப்பின் மின்னஞ்சல் அஞ்சல் பட்டியல் அடிப்படையில் பிரிட்டன் விண்வெளி உயிரியல் சங்கம் உருவாக்கப்பட்டது.

இராயல் வானியல் சங்கம் [2] மற்றும் நாசா வானியற்பியல் நிறுவனம் [3] ஆகியவற்றுடன் பிரிட்டன் விண்வெளி உயிரியல் சங்கமானது அதிகாரப்பூர்வ தொடர்புகள் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Intl. Partners: Astrobiology Society of Britain". NASA. மூல முகவரியிலிருந்து 2012-06-09 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-07-24.
  2. "Associations and Affiliations". Royal Astronomical Society. பார்த்த நாள் 5 December 2014.
  3. "Society FAQs". Astrobiology Society of Britain. மூல முகவரியிலிருந்து 18 October 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 5 December 2014.

புற இணைப்புகள்[தொகு]