உள்ளடக்கத்துக்குச் செல்

பிரிட்சு ஆப்மேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரிட்சு ஆப்மேன்

பிரிட்சு ஆப்மேன் (Fritz Hofmann) செருமன் நாட்டைச் சேர்ந்த ஒரு கரிம வேதியியலாளர் ஆவார். பிரடெரிக் காரல் ஆல்பெர்ட்டு என்றும் இவர் அழைக்கப்படுகிறார். 1866 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2 அன்று கொல்லேடா நகரில் ஆப்மேன் பிறந்தார். முதன் முதலில் செயற்கை முறையில் செயற்கை இரப்பரை பிரிட்சு ஆப்மேன் தயாரித்தார். 1956 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 22 அன்று செருமனியின் ஆனோவர் நகரில் பிரிட்சு ஆப்மேன் இறந்தார்.

ஆப்மேன் செருமனியிலுள்ள உரோசுடாக் பல்கலைக்கழகத்தில் வேதியியல் படித்தார். [1] 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 அன்று உலகின் முதல் செயற்கை ரப்பர் தயாரிப்பதற்கான காப்புரிமைக்கு இவர் விண்ணப்பித்தார். [2]

விருதுகள்

[தொகு]

1912 ஆம் ஆண்டில் செயற்கை இரப்பர் குறித்த ஆராய்ச்சிக்காக செருமன் வேதியியல் கழகம் ஆப்மேனுக்கு எமில் பிசர் பதக்கத்தை வழங்கி சிறப்பித்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. See entry of Fritz Hofmann in Rostock Matrikelportal
  2. "[[Lanxess]] documentation". Archived from the original on 2009-03-30. பார்க்கப்பட்ட நாள் 2009-09-12.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரிட்சு_ஆப்மேன்&oldid=3044065" இலிருந்து மீள்விக்கப்பட்டது