பிரிங்கி ஆறு
பிரெங்கி ஆறு Bringhi River | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | சம்மு காசுமீர் |
மண்டலம் | காஷ்மீர் பள்ளத்தாக்கு |
மாவட்டம் | அனந்தநாக்கு |
சிறப்புக்கூறுகள் | |
நீளம் | 30 கிலோமீட்டர் |
பிரங்கி அல்லது பிரெங்கி ஆறு (Bringhi River) இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தில் உள்ள அனந்தநாக்கு நகரத்தில் பாயும் ஒரு ஆறு ஆகும். அனந்த்நாக், ஆச்சி டான்டரில் ஜீலம் ஆற்றிற்கு நீரளிப்பதற்கு முன்பு மொத்தம் 30 கிலோமீட்டர்கள் (19 மைல்) பாய்கிறது. நவ்பக்கு ஓடை, அகலான் காடோல் ஓடை மற்றும் டாக்சம் ஓடை ஆகிய மூன்று நீரோடைகளின் சங்கமத்தால் பிரெங்கி ஆறு உருவாகிறது. நவ்பக்கு நீரோடை சுமார் 12000 அடி உயரம் கொண்ட மார்கன் உச்சி பனிப்பாறைகளிலிருந்து உருவாகிறது. இதே போல தக்சம் நீரோடை அனந்த்நாக்கு மாவட்டத்தில் உள்ள சிந்தன் பனிப்பாறைகளில் இருந்து உருவாகிறது. இந்த ஆறு தக்சமில் செங்குத்தானதாகவும் ஊடாகச் செல்லும் ஆற்றையும் உடைய ஒடுக்கமான பள்ளத்தாக்கு (2,438 மீட்டர் (7,999 அடி) உயரம்) வழியாக செல்கிறது.[1] ஜீலம் ஆற்றின் துணை ஆறுகளில் ஒன்றான கோகர்நாக்கு ஆறு பிருங்கி ஆறு பள்ளத்தாக்கில் உள்ளது. தேவல்காம் கிராமத்தில் சுண்ணாம்புக் கல்லின் பிளவுகளில் காணாமல் போகும் பிரெங்கி ஆறுதான் அச்சாபல் நீரூற்றின் உண்மையான ஆதாரம் என்று சர் வால்டர் லாரன்சு தனது தி வேலி ஆஃப் காசுமீர் என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார். சமீபத்தில் வந்தேவெல்கம் என்ற இடத்தில் ஆற்றில் ஒரு மூழ்கும் துளை தோன்றி நீரின் முழு ஓட்டத்தையும் உறிஞ்சியது. இந்த ஆற்றில் மூழ்கும் துளை தோன்றியது இது இரண்டாவது முறையாகும். [2][3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Kashmir - Excursions". Peace Kashmir இம் மூலத்தில் இருந்து 17 மார்ச் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140317162015/http://www.peacekashmir.org/tourism-culture/kashmir-excursions.htm. பார்த்த நாள்: 19 February 2014.
- ↑ Gul, Khalid (16 July 2011). "Govt yet to bring Daksum, Sinthan Top on tourist map". Greater Kashmir இம் மூலத்தில் இருந்து 22 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140222103747/http://www.greaterkashmir.com/news/2011/Jul/16/govt-yet-to-bring-daksum-sinthan-top-on-tourist-map-54.asp. பார்த்த நாள்: 19 February 2014. "... Kokernag, the heart of Brengi river valley ..."
- ↑ "Kokernag". Official Website of Jammu & Kashmir Tourism இம் மூலத்தில் இருந்து 19 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140219010941/http://jktourism.org/destinations/kashmir/kokernag.html. பார்த்த நாள்: 19 February 2014. "Botanical Garden ... is located in the center of Bringhi valley in Kokernag"