உள்ளடக்கத்துக்குச் செல்

பிராகாத்பாளையனா்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரகாத்பாளையானா் என்பவர்கள் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் ஆண்ட ஆட்சியாளர்களாவர். இவர்களது தலைநகரம் மசூலிப்பட்டிணத்திற்கு அருகிலுள்ள பிதுண்டா ஆகும். இவர்களின் தலைநகர் கலிங்க மன்னன் காரவேலனால் [கி.மு.180 ] அழிக்கப்பட்டதாக அவனது ஆத்திக்கம்பா கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நகரை தலாமி மாநகரமாக குறித்துள்ளார்.

ஜெயவர்மன் என்பவனே இந்த மரபில் அறிவயருகிற ஒரே மன்னனாவான் இவர்களது தலைநகராக பிதுண்டா கி.பி 270-285 இடையிலான காலகட்டத்தில் இருந்துள்ளது. ஜெயசிம்மன் வெளியிட்ட கி.பி 280 காலகட்ட செப்பேடு தெனாலி அருகில், உள்ள கொண்டாமுடி என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. ஜெயசிம்மன் இந்த செப்பேட்டை குடுரா ( மசூலிப்பட்டிணம் அருகில்) என்ற இடத்தில் இருந்த தனது வெற்றிப் பாசறையில் இருந்து வெளியிட்டதாக ஆணை வடிவில் உள்ளது. இதில் பிராமணர்கள் பலருக்கு நிலமாணியம் வழங்கும் ஆணை பிராகிருத மொழியில் இடம்பெற்றுள்ளது. இதில் தன்னை ராஜா என்றும் தான் மகேசுவரனின் பக்தன் என்றும் குறிப்பிட்டுக் கொள்கிறான்.

பிரகாத்பாளையனர்கள் இந்தியவாவின பழமையான அரச மரபினர் இவர்கள் தற்கால ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் ஆந்திரத்தின் வடபகுதியில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் ஆண்டவர்கள் ஆவர். இந்த மரபில் அறியப்படுகின்ற மன்னன் ஜெயவர்மனாவான். இவன் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசியை ஆந்திர இசுவாகு மன்னன் மணந்தான். இவனது தலைநகரம் கிருஷ்ணா மாவட்டத்தில் இருந்த கொடுரு ஆகும். இவனது மரணத்துக்குப் பிறகு இவனது நாட்டில் கிருஷ்ணா ஆற்றுக்கு தெற்கில் உள்ள பகுதியை ஆந்திர கோத்திரிக்கா மரபினரும், ஆற்றின் வடக்கில் உள்ள பகுதியை சாலங்காயனர்களும் கைப்பற்றிக் கொண்டனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராகாத்பாளையனா்&oldid=2691572" இலிருந்து மீள்விக்கப்பட்டது