பிரவரா மருத்துவ அறிவியல் நிறுவனம்
Jump to navigation
Jump to search
உருவாக்கம் | 2003 |
---|---|
வேந்தர் | முனைவர் விஜய் கேல்கார் |
தலைவர் | முனைவர் ராஜேந்திர விகே பாட்டில் |
நிருவாகப் பணியாளர் | 110 |
பட்ட மாணவர்கள் | 2000 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 500 |
அமைவிடம் | அகமதுநகர், மகராட்டிரம், இந்தியா |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
பிரவரா மருத்துவ அறிவியல் நிறுவனம் (Pravara Institute of Medical Sciences) என்பது இந்தியாவின் மகாராட்டிராவின் அகமத்நகரில் அமைந்துள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகும். இதனை விதல்ராவ் விகே பாட்டில் நிறுவிய பிரவரா மருத்துவ அறக்கட்டளை 1972ஆம் ஆண்டில் நிறுவியது. இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தினை நிறுவியவர் டாக்டர் பாலசாஹேப் விகே பாட்டீல் ஆவார். 2003ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு நிகர்நிலைப் பல்கலைக்கழக நிலையை வழங்கியது.
இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் கிராம மருத்துவக் கல்லூரி, கிராம பல் மருத்துவக் கல்லூரி, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இயன்முறைச் சிகிச்சைக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, உயிரித்தொழில்நுட்ப மையம், சமூக மருத்துவ மையம் செயல்படுகிறது.[1][2][3][4][5]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Deemed University Maharashtra". University Grants Commission (India). 7 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Now, deemed medical varsity admissions under state control". Yogita Rao. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 March 2017. 7 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Bharati, Symbiosis granted top ranking". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 30 March 2017. 7 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Now, 3 more deemed varsities move HC over medical admissions". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 August 2016. 7 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ https://www.ugc.ac.in/uni_deemed.aspx?id=111