உள்ளடக்கத்துக்குச் செல்

பிரம்மவித்ய உபநிடதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரம்மவித்ய உபநிடதம்
Om
தேவநாகரிब्रह्मविद्या
சமக்கிருத ஒலிப்பெயர்ப்புபிரம்மவித்யா
உபநிடத வகையோகக் கலை[1]
தொடர்பான வேதம்யசுர் வேதம்
அத்தியாயங்கள்1
பாடல்களின் எண்ணிக்கைபல கையெழுத்துப் பிரதிகள் (14 முதல் 110)
அடிப்படைத் தத்துவம்யோகக் கலை, வேதாந்தம்a

பிரம்மவித்ய உபநிடதம் ( Brahmavidya Upanishad ) என்பது ஒரு சமசுகிருத உரையாகும். இந்து சமயத்தின் சிறிய உபநிடதங்களில் ஒன்றான [2] இது நான்கு வேதங்களில் உள்ள இருபது யோக உபநிடதங்கங்களில் ஒன்றாகும்.[3]

iதன் கையெழுத்துப் பிரதிகளின் இரண்டு முக்கிய பதிப்புகள் அறியப்படுகின்றன. ஒன்று அதர்வண வேதத்துடன் இணைக்கப்பட்ட பதினான்கு வசனங்களைக் கொண்டுள்ளது. [4] மற்றொரு பெரிய கையெழுத்துப் பிரதி தெலுங்கில் உள்ளது.[5] நூற்று பத்து வசனங்கள் இடம் பெற்ற இது யசுர் வேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [6][7]

உபநிடதம் முக்கியமாக ஓம் என்ற பிரவண மந்திரத்தின் அமைப்பு, அதன் ஒலியின் அம்சம், அதன் இடம், அதன் ஆரம்பம் மற்றும் முடிவு மற்றும் இலயத்தின் முக்கியத்துவம் (அதன் ஒலி மறைதல்) ஆகியவற்றை விளக்குகிறது.[8][9] ஓம் என்பது பிரம்மம் (இறுதி உண்மை) என உரை வலியுறுத்துகிறது. [10] தொண்டையில் விஷ்ணுவும், அண்ணத்தின் நடுவில் உருத்திரனும், நெற்றியில் சிவனும், மூக்கின் நுனியில் சதாசிவனும், இதயத்தில் பிராமணனும் ஐந்து ஆத்மாக்களாக மனித உடலுக்குள் தேவர்கள் வாழ்கிறார்கள் என்று குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது.[11][12] எல்லா இடங்களிலும் வியாபித்திருக்கும் பிரம்மம், எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட பரமாத்மாவைப் போலவே உள்ளார்ந்த ஆன்மா என உரை கூறுகிறது.[13]

இது பிரம்மவித்யோபநிஷத் என்றும் அழைக்கப்படுகிறது.[14][15] 108 உபநிடதங்களின் நவீன சகாப்தத் தொகுப்பில் இராமன் அனுமனுக்கு கூறப்பட்டதாகச் சொல்லப்படும் முக்திகா நியதிகளின் வரிசையில் இது 40 வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.[16]

இதனையும் பார்க்கவும்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Deussen 1997, ப. 567.
  2. Deussen 1997, ப. 557, 713.
  3. Ayyangar 1938, ப. vii.
  4. Deussen 1997, ப. 667-670.
  5. Deussen 1997, ப. 667.
  6. Prasoon 2008, ப. 82.
  7. Ayyangar 1938, ப. 198-216.
  8. Nair 2008, ப. 252.
  9. Deussen 1997, ப. 668.
  10. Deussen 1997.
  11. Ayyangar 1938, ப. 205.
  12. Larson & Bhattacharya 2008, ப. 610.
  13. Ayyangar 1938, ப. 205-206.
  14. Karl H. Potter 1995, ப. 1472.
  15. Vedic Literature, Volume 1, A Descriptive Catalogue of the Sanskrit Manuscripts, p. PA482, கூகுள் புத்தகங்களில், Government of Tamil Nadu, Madras, India, page 482
  16. Deussen 1997, ப. 556-557.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மவித்ய_உபநிடதம்&oldid=3747095" இலிருந்து மீள்விக்கப்பட்டது