பிரம்மத் தண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரம்மத் தண்டு
Argemone mexicana flower 2.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: Eudicots
வரிசை: Ranunculales
குடும்பம்: Papaveraceae
பேரினம்: Argemone
இனம்: A. mexicana
இருசொற் பெயரீடு
Argemone mexicana
L.
Argemone.mexicana001.jpg
Indian Argemone Mexicana

பிரம்மத்தண்டு அல்லது நாய்கடுகு (அ)குடியோட்டிப்பூண்டு(அ)குருக்கம்செடி(Argemone mexicana[1]) என்பது பாப்பவெராசியே [2] குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது உலகின் எல்லா பகுதிகளிலும்காணப்படுகிறது. இத் வளர்ச்சி தாங்கி வளரக்கூடியத் தாவரம். இதன் தாயகம் வடக்கு அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ[3] ஆகும். இது மூலிகையாக பயன்படுகிறது. இந்த செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது.

மருத்துவ குணங்கள்[தொகு]

இதன் இலைச்சாற்றை 10மி காலை வெறும் வயிற்றில் 1 மாதம் அருந்தீ வந்தால் சொறி, சிரங்கு, மேகரணம், குட்டம் ஆகியவை தீரும். இலையை அரைத்து கடி வாயில் வைத்து கட்டினால் தேள் விஷம் இறங்கும். இலையை அரைத்து பூசி வர சொறி, சிரங்கு , கரப்பான் தீரும், உள்ளங்கை, உள்ளங்கால் விரைவில் ஆறும். இதன் பூவை நீரில் ஊறவைத்து அந்த நீரை தலைக்கு தேய்த்து குளிக்க 40 நாளில் கண் பார்வை மங்கல், கண் சிவத்தல் , எரிச்சல், நீர் வடிதல் ஆகியவை குணமாகும். இதன் ஒடித்தால் பால் வரும், இந்த பாலை கண்ணில் விட கண் வலி , சதை வளருதல், கண் சிவத்தல், அரிப்பு, கூச்சம், ஆகியவை குணமாகும். இதன் விதையை நெருப்பிலிட்டு புகைத்து அப்புகை வாயில் படுமாறு செய்தால் சொத்தைப் பல் புழு விழும், வலி தீரும், செடியை உலர்த்தி பின் எடுத்து சாம்பாலாக்கி சலித்து வைத்து இதில் பல் துலக்கினால் பல் ஆட்டம், சொத்தை, சீழ் வடிதல், வீக்கம் ஆகியவை குணமாகும். இது ஒரு சிறந்த பல்பொடியாகவும் உள்ளது.

இதன் வேரை 200மி நீரில் கொதிக்க வைத்து வடித்து குடித்துவந்தால் காச நோய் குணமாகும்.

“மூலத்தில் பிரம்மந்தண்டு வடவேரை வணங்கி பூணவே குளிசமாடி புகழ்ச்சியாய் கட்டிவிட தோன்றிதாமே… பேய் ஓடும்” இது ஒரு பழம் பாட்டு.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மத்_தண்டு&oldid=2528675" இருந்து மீள்விக்கப்பட்டது