உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதீப் சேது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரதீப் சேது (Pradeep Seth) என்பவர் இந்திய தீநுண்மியலாளர் ஆவார். இவர் 2003ஆம் ஆண்டில் எச். ஐ. விக்கு எதிராக இவர் உருவாக்கிய தடுப்பு மருந்தினை தனக்குத்தானே செலுத்திக்கொண்டார்.[1] இவர் 1968ஆம் ஆண்டு முதல் திநுண்மியியல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தேசிய மருத்துவ அறிவியல் கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார்.[2]

இவர் 1970-ல் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் மருத்துவம் மற்றும் நுண்ணுயிரியலில் முதுநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் 2005 வரை அதே நிறுவனத்தில் கற்பித்தல் பணியிலிருந்தார். தீநுண்மியியல் துறையில் 4 இந்தியப் காப்புரிமையும் 4 பன்னாட்டுக் காப்புரிமையும் பெற்றுள்ளார்.[3] இவர் ஓம் பிரகாசு பாசின் விருதினை சுகாதாரம் மற்றும் மருத்துவ அறிவியல் சாதனைக்காக 2004-05ஆம் ஆண்டில் பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Development of a candidate DNA/MVA HIV-1 subtype C vaccine for India". Vaccine 24 (14): 2585–2593. 2006. doi:10.1016/j.vaccine.2005.12.032. பப்மெட்:16480792. 
  2. "List of Fellows - NAMS" (PDF). National Academy of Medical Sciences. 2016. பார்க்கப்பட்ட நாள் 19 March 2016.
  3. "Protected By Symantec" (PDF). docisolation.prod.fire.glass. Archived from the original (PDF) on 2019-12-22. பார்க்கப்பட்ட நாள் 2019-12-22.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதீப்_சேது&oldid=3563477" இலிருந்து மீள்விக்கப்பட்டது