பிரண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரண்டை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Vitales
குடும்பம்: Vitaceae
பேரினம்: Cissus
இனம்: C. quadrangularis
இருசொற் பெயரீடு
Cissus quadrangularis
L.
வேறு பெயர்கள்

Cissus quadrangula
Vitis quadrangularis

சோழவந்தான் அருகே முள்வேலியில்

பிரண்டை அல்லது வச்சிரவல்லி (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். பிரண்டையில் ஓலைப் பிரண்டை, உருட் பிரண்டை, இனிப்புப் பிரண்டை, புளிப்புப் பிரண்டை, முப்பிரண்டை எனப் பல வகைகள் உண்டு.[1] பிரண்டையானது எலும்புகளை பலப்படுத்தும் மருந்தாகவும், ரத்த மூலத்துக்கான மருந்தாகவும், வாயு பிடிப்பு, கைகால் குடைச்சலுக்கான மருந்தாகவும் பயன்படுகிறது.[சான்று தேவை]

பிரண்டைச் செடி[தொகு]

நீர்ப்பற்றான இதன் தண்டு (கொடி) நான்கு பக்க விளிம்பு கொண்டது. பூக்கள் வெள்ளை நிறமானவை; பழம் கறுப்பு நிறமானதாகும்.

வளரும் தன்மை[தொகு]

பொதுவாக இது வெப்பமான இடங்களில் வளர்கிறது. கொடிவகையைச் சார்ந்தது. இந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமாகக் காணப்படுகிறது. சதைப்பற்றான நாற்கோண வடிவத்தண்டுகளையுடைய ஏறு கொடி, பற்றுக்கம்பிகளும் மடலான இலைகளும் கொண்டிருக்கும் சாறு உடலில் பட்டால் நமச்சல் ஏற்படும் சிவப்பு நிற உருண்டையான சிறியசதைக் கனியுடையது விதை. கொடி மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது, இதில் ஆண் பிரண்டை, பெண் பிரண்டை எனஇரு வகைப்படும். பெண் பிரண்டையின்கணு 1 முதல் 1 1\2 அங்குலமும் ஆண்பிரண்டையின் கணுவு 2 முதல் 3 அங்குலமும் இருக்கும். இலைகள் முக்கோண வடிவில் முள் இல்லாமல் பெரிதாக இருக்கும், காரத்தன்மையும். எரிப்புக் குணமும், மைக்ககும் இயல்பும்உடையது.

பிரண்டையின் பயன்பாடு[தொகு]

  • பிரண்டையைக் கொண்டு சட்டினி மற்றும் வடகம் செய்யலாம்.
  • இந்துக்களின் மரண நல்லடக்கங்களில் புதைக்குழியின் மேல்,

" கண்ணிப்பிள்ளைச்செடிகள் சிலவற்றோடு பிரண்டைக்கொடியின் சில துண்டுகளும் " நட்டு வைப்பது மரபாகத் தொடர்ந்து வருகிறது.

உசாத்துணை[தொகு]

  1. டாக்டர் வி. விக்ரம் குமார் (16 சூன் 2018). "வைரம் பாயச் செய்யும் பிரண்டை". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2018.
  • மூலிகைகள் - ஓர் அறிமுகம் - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரண்டை&oldid=3577806" இலிருந்து மீள்விக்கப்பட்டது