உள்ளடக்கத்துக்குச் செல்

பிரடெரிக்கு சுவான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரடெரிக்கு சுவான்
பிரடெரிக்குசுவான், டார்ட்மண்ட்டு
நாடுசெருமனி
பிறப்புசனவரி 21, 2004 (2004-01-21) (அகவை 20)
பட்டம்கிராண்டுமாசுட்டர் (2022)[1]
பிடே தரவுகோள்2493 (திசம்பர் 2021)
உச்சத் தரவுகோள்2634 (ஆகத்து 2023)

பிரடெரிக்கு சுவான் (Frederik Svane) செருமனி நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 2004 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2022 ஆம் ஆண்டு 'பிரடெரிக்கு சுவானுக்கு சதுரங்க கிராண்டு மாசுட்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சதுரங்க வாழ்க்கை[தொகு]

சதுரங்க வீரர் இராசுமசு சுவானின் இளைய சகோதரராக பிரடெரிக்கு சுவான் அறியப்படுகிறார். நான்கு வயதில், இவர் ஒரு சதுரங்க கழகத்தில் சேர்ந்தார். சகோதரர் ராசுமசுக்கு எதிராக கற்றுக் கொள்ளவும் விளையாடவும் தொடங்கினார். [2]

2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் , சுவான் உலக இணையவழி இளையோர் போட்டியில் 16 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுக்கான போட்டியை வென்றார். [3]

2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் , அப்போதைய பிடே மாசுட்டராக இருந்த சுவான், உயர்மட்ட செருமன் சதுரங்க வீரர்களுக்கான போட்டியான காடர் சதுரங்கப் போட்டியில் அப்போது முதல் தரம் பெற்ற செருமனிய வீரரான மத்தியாசு புளூபாமை ஆச்சரியமான முறையில் தோற்கடித்தார். [3]

அக்டோபர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் செருமனி நாட்டின் கீலில் நடந்த சுழல் தொடர் முறை போட்டியில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததன் மூலம் சுவான் தனது முதல் கிராண்டுமாசுட்டர் தகுதியை அடைந்தார். [2]

2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆம்பர்க்கு சதுரங்கக் கழகம் நடத்திய மூடிய சுற்று கிராண்டு மாசுட்டர் போட்டியில் 2607 புள்ளிகள் மதிப்பீட்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்ததன் மூலமும், ஆம்பர்க்கு அழைப்பிதழ் சதுரங்கப் போட்டியில் எட்வர்டாசு ரோசென்டாலிசுக்கு எதிராக சமநிலை முடிவை எட்டியதன் மூலமும் ஒரே நாளில் இரண்டு கிராண்டுமாசுட்டர் தகுதிநிலைகளை நிறைவு செய்தார்.[4]

அக்டோபர் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் உலக இளையோர் சதுரங்கப் போட்டியில் வலுவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். [5]

2023 சதுரங்க உலகக் கோப்பை போட்டியில் பிரடெரிக்கு சுவான் விளையாடினார், அங்கு இவர் முதல் சுற்றில் லீ சூன் இயோக்கை தோற்கடித்தார், ஆனால் இரண்டாவது சுற்றில் இவான் செபரினோவால் தோற்கடிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "FIDE Title Application (GM)" (PDF).
  2. 2.0 2.1 Doggers, Peter (June 1, 2022). "Frederik Svane Sets Likely Record, Scoring Final 2 GM Norms In 24 Hours".Doggers, Peter (June 1, 2022).
  3. 3.0 3.1 Fischer, Johannes (April 6, 2021). "German top tournament starts with a surprise".Fischer, Johannes (April 6, 2021).
  4. "Frederik Svane becomes GM after earning two norms in 24 hours". May 28, 2022.
  5. Schulz, Andre (October 18, 2022). "Frederik Svane leads at World Junior Championship".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரடெரிக்கு_சுவான்&oldid=3780185" இலிருந்து மீள்விக்கப்பட்டது