பியேர் சம்பான்
பியேர் சம்பான் Pierre Chambon | |
---|---|
பிறப்பு | 7 பெப்ரவரி 1931 முல்லவுசு, ஃபிரான்சு |
தேசியம் | ஃபிரான்சு |
பணியிடங்கள் | உயிர்க்கல, மூலக்கூற்று உயிரியல்,மரபியல் நிறுவனம் (உயிர்க்கல, மூலக்கூற்று உயிரியல்,மரபியல் நிறுவனம்) |
அறியப்படுவது | உட்கரு இசைம ( hormone) புலன்வாங்கிகள் |
விருதுகள் | ரிச்சர்டு லவுன்சுபெர்ரி விருது (1982) ஃஆர்வே பரிசு (1987) லூயிசா கிராசு ஃஆர்விட்சு பரிசு அடிப்படை மருத்துவ ஆராய்ச்சிக்கான ஆல்பெர்ட்லக்சர் விருது ஆல்ஃபிரெடு பி. சுலோன் ஜூனியர் பரிசு (2003) கெயிர்டுனர் அறக்கட்டளையின் பன்னாட்டு விருது (2010) |
பியேர் சம்பான் (Pierre Chambon) (பிறப்பு 7 ஃபிப்ரவரி 1931, முல்லவுசு, ஃபிரான்சு) உயிர்க்கல, மூலக்கூற்று உயிரியல், மரபியல் நிறுவனத்தை ஃபிரான்சுநாட்டு சுடிராசுபர்கில் நிறுவியவர். இவர் முழுக்கருவனியல் மரபன்களின் கட்டமைப்பையும் கட்டுப்பாட்டுமுறைகளையும் கண்டறிய முதலில் மரபன் உயிரிப்படியாக்கத்தையும் வரிசைப்பிரிப்பு தொழில் நுட்பத்தையும் பயன்படுத்திய மூலக்கூற்று உயிரியலாளர் ஆவார். இவரது அறிவியலுக்கான பேரளவுப் பங்களிப்புகள் RNA polymerase II(B) இனங்காணல், படியெடுத்தல் கட்டுப்பாட்டு உறுப்புகளை இனங்காணல், கலக்கரு புலன்வாங்கிகளின் உயிரிப்படியாக்கத்தையும் பிரிப்புமுறையையும் கண்டறிதலும் அதன்வழியாக அவற்றின் கட்டமைப்பையும் மாந்த உடலியக்கத்தில் அவற்றின் செயல்பாடுகளையும் அறிதலும் ஆகியவற்றில் அமைந்தன. இவரது ஆய்வுகள் 1970-90கள் கால இடைவெளியில் அமைந்தன.
சம்பான் 1985இல் அயல்நாட்டு ஆய்வுதவியாளராக அமெரிக்கத் தேசிய அறிவியல் கல்விக்கழகத்திலும் பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகத்திலும் தேர்வு செய்யப்பட்டார். இவர் 1987இல் சுவீடிய அரசு அறிவியல் கல்விக்கழகத்திலும் அயல்நாட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.[1] இவர் 1999இல் லூசியா கிராசு ஃஆர்விட்சு பரிசைக் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றார். மேலும் 2003இல் இவருக்கு வளர்ச்சி உயிரியலில் டைம்சு மார்ச் பரிசு வழங்கப்பட்டது. இவர் அடிப்படி அறிவியல் ஆராய்ச்சிக்கான ஆல்பெர்ட் லக்சர் விருதை 2004இல் தன்களப்பணிக்காகப் பெற்றார். அடுத்து 2010இல்சம்பான் கெயிர்டுனர் அறக்கட்டளையின் பன்னாட்டு விருதைப் பெற்றார். இது இவர் ’’விலங்கு உயிர்க்கலங்களில்படியெடுத்தலின் அடிப்படை இயங்கமைப்பை விளக்கியதற்காகவும் கலக்கரு புலன்வாங்கிகளின் மீக்குடும்பத்தின் கண்டுபிடிப்புக்காகவும் தரப்பட்டது’’.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Royal Swedish Academy of Sciences: Pierre Chambon". 2017-11-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-22 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Pierre Chambon, M.D. - The Gairdner Foundation". 2010-06-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-08-22 அன்று பார்க்கப்பட்டது.