பியூட்டி அண்ட் த கீக்
பியூட்டி அண்ட் த கீக் | |
---|---|
![]() | |
வகை | உண்மைநிலை நிகழ்ச்சி |
எழுத்து | இராப் சோகென் டிரேஸ் சுலோபாட்கின் டேவிட் வூலாக் |
இயக்கம் | பிரையன் சுமித் லிசா சிங்கர் ஹசி மேட் ஜாக்சன் ஹால் கிரான்ட் |
பருவங்கள் | 5 |
அத்தியாயங்கள் | 48 |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு |
|
ஓட்டம் | 46 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை |
|
ஒளிபரப்பான காலம் | சூன் 1, 2005 மே 13, 2008 | –
பியூட்டி அண்ட் தி கீக் (Beauty and the Geek) என்பது ஒரு அமெரிக்க உண்மைநிலை தொலைக்காட்சித் தொடராகும். இது "இறுதியான சமூக பரிசோதனை" என்று விளம்பரப்படுத்தப்பட்டு ஜூன் 1, 2005 அன்று தி டபிள்யுபி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. பிரையன் சுமித், லிசா சிங்கர் ஹசி, மேட் ஜாக்சன் மற்றும் ஹால் கிரான்ட் ஆகியோர் இந்நிகழ்ச்சியினை இயக்கியிருந்தனர். ஆஷ்டன் குட்சர், ஜேசன் கோல்ட்பர்க் மற்றும் ஜே.டி. ரோத் ஆகியோர் இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்களாக இருந்தனர். இந்த நிகழ்ச்சியின் தலைப்பு பிரெஞ்சு புதின எழுத்தாளர் கேப்ரியல்-சுசான் பார்போட் டி வில்லெனுவ் எழுதிய பியூட்டி அண்ட் தி பீஸ்ட் என்ற விசித்திரக் கதையின் பகடி. இது பாக்ஸ் டெலிவிஷன் ஸ்டுடியோவின் துணைப்பிரிவான பாக்ஸ் 21 தயாரித்த முதல் நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி தொடர்ச்சியாக ஆறு பருவம் வரை நீண்டது.
போட்டியாளர்கள்
[தொகு]இந்நிகழ்ச்சியில் "அழகானவர்கள்" உள்ள ஒரு குழுவும் (தமது அழகான தோற்றத்தில் அதீத நம்பிக்கையுள்ள இளம் பெண்கள்) "அழகற்றவர்கள்" உள்ள ஒரு குழுவும் (சமூகத்தின் சூட்சும புத்தி அல்லது தமது தோற்றத்தைவிட அறிவைவே முதன்மையாக நம்புகின்ற இளம் ஆண்கள்) இடம் பெற்றனர். இறுதியில் தங்களுக்கு வழங்கப்பட்ட சவால்களில் வெற்றிபெற்றவர்களுக்கு $250,000 பரிசை வெல்லும் வாய்ப்ப்பு வழங்கப்பட்டது.
ஒரு போட்டியாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சி ஒரு சமூக பரிசோதனையாகவும் கருதப்பட்டது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் பொதுவாக தனது சக போட்டியாளரிடமிருந்து கற்றுக்கொள்கிறார்கள். போட்டியின் போது, போட்டியாளர்கள் ஒரு மாளிகையில் தங்கி தங்களுக்கு வழங்கப்படும் தொடர்ச்சியான சவால்களில் பங்கு கொண்டனர். அழகிகள் அறிவுசார் சவால்களிலும், அழகற்றவர்கள் சமூகத் திறன் சம்பந்தப்பட்ட சவால்களிலும் போட்டியிட்டார்கள். போட்டி நடைபெறும் காலகட்டத்தில் ஒவ்வொரு அழகான பெண்ணும் ஒரு அழகற்ற ஆணுடன் ஓர் அறையில் ஒன்றாக வாழ்கிறாள்.
இறுதி நிகழ்ச்சி
[தொகு]ஐந்தாவது பருவத்துக்குப் பிறகு, நிகழ்ச்சியில் புதிய ஆர்வத்தைத் தூண்டுவதற்காகவும், வடிவமைப்பில் புதுமையான திருப்பங்களைச் சேர்ப்பதற்காகவும் நிகழ்ச்சி காலவரையின்றி நிறுத்தப்பட்டது.[1] அக்டோபர் 2008 இல், ஆறாவது பருவத்திற்கான நடிகர் தேர்வு தொடங்கியது.[2] நிகழ்ச்சி எம்டிவி என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது. இதில் ஒருசில பிரபலங்கள் அழகிகளாக நடிக்க இருந்தனர். [3] இருப்பினும், ஆறாவது பருவம் ஒருபோதும் நிறைவேறவில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Adalian, Josef (April 28, 2008). "'Geek' not very popular with CW". Variety. Archived from the original on January 28, 2022. Retrieved May 24, 2022.
- ↑ "Beauty and the Geek: Plans Underway for New Season of Reality Show". TVSeriesFinale.com. October 31, 2008. Archived from the original on November 6, 2008.
- ↑ Hibberd, James (November 18, 2008). "'Beauty and the Geek' could go to MTV". The Hollywood Reporter. Archived from the original on May 24, 2022. Retrieved May 24, 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]