பியனொசா
பியனொசா (Pianosa) என்பது திர்ரேனியக் கடலில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள இத்தாலியத் தீவு ஆகும். இது இத்தாலியின் லிவோர்னோ மாகாணத்தில் அமைந்துள்ளது. தொஸ்கானோ தீவுக்கூட்டத் தேசியப் பூங்காப் பிராந்தியத்தில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள முக்கிய ஏழு தீவுகளில் இதுவும் ஒன்றாகும். இது அத்தீவுக்கூட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஐந்தாவது தீவாகும். இதன் மொத்த நிலப் பரப்பளவு 10.25 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். அத்துடன் இத்தீவின் கரையோரச் சுற்றளவு 26 கிலோமீற்றர்கள் ஆகும். மெசொலிதிக் கலாசார மக்கள் இத்தீவில் வாழ்ந்து வந்தனர் எனவும் அவர்களின் மீன்பிடி உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்குள்ள வெளிச்சவீட்டில் இருந்து வெளியேறும் இரு வெள்ளொளிகள் 18 கடல் மைல் தூரத்தில் தெரியக்கூடியவை ஆகும்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Faro di Isola di Pianosa Marina Militare
- ↑ Fari di Toscana