பிணவறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அமரர் அறை அல்லது பிணவறை (morgue அல்லது mortuary) இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாக்கும் அறை ஆகும். இந்தியாவைப் பொறுத்த வரை, சட்டம சார் மருத்துவ மரணங்களில் மரணமுற்றோரின் உடல்களை மருத்துவ உடற்கூறுக்கு உட்படுத்துவதற்காக இவ்வறைகளில் பாதுகாப்பாக வைத்திருப்பர். இந்த அறை உயர் அழுத்த குளிர் சாதன காற்றினால் சூழப்படும் நிலையில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த வெப்ப நிலையிலேயே உடல்கள் சிதைவு அடையாமல் இருக்கும். சில சந்தேக இறப்புக்கள் மற்றும் விபத்தினால் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைந்த உடல்களை அடையாளம் காணும் வரை இவ்வறையில் வைத்திருக்கப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணவறை&oldid=1352049" இலிருந்து மீள்விக்கப்பட்டது