பிட்மன் சுருக்கெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
colspan="2"
பிட்மன் சுருக்கெழுத்து
வகை சுருக்கெழுத்து
மொழிகள் ஆங்கிலம்
உருவாக்கியது ஐசக் பிட்மன்
காலக்கட்டம் 1837–இப்போது வரை
மூல முறைகள் artificial script
பிட்மன் சுருக்கெழுத்து
தோற்றுவித்த முறைகள் பிட்மன் நியூ ஈர
Pitman.png
பல்வேறு சுருக்கெழுத்து முறைகள் - மேலிருந்து இரண்டாவது இடத்தில் பிட்மன் முறை

பிட்மன் சுருக்கெழுத்து (Pitman shorthand) சுருக்கெழுத்து முறைகளுள் ஒன்று. பல்வேறு குறியீடுகளைப் பயன்படுத்தி சின்னஞ்சிறு பத்திகளில் தகவல்களையும், பேச்சுகளையும், விவரங்களையும் பதிவு செய்துகொள்ளும் முறையே சுருக்கெழுத்தாகும். விரைவாக எழுதும் இம்முறையில் பயிற்சி பெற்றவர்களைச் சுருக்கெழுத்தர் (stenographer) எனக்கூறுவர். Stenography என்பது கிரேக்க மொழிச் சொல்லாகும். 'Steno' என்றால் குறுகிய (அ) சுருக்கிய, 'graphy' என்றால் எழுதுதல் என்பது பொருளாகும்.

சிசேரோ (Cicero), செனெகா (Seneca) போன்ற ரோமானிய தத்துவ அறிஞர்களின் "Tenets and Lectures" என்ற சொற்பொழிவை மெர்கஸ் தெரோ (Mercus Thero) என்பவர் முதன் முதலாக சிறு சிறு அமைப்புகளில் எழுதினார் எனக் கூறப்படுகிறது. ஆனால் தற்போதைய சுருக்கெழுத்து முறை 19ஆம் நூற்றாண்டில்தான் சிறப்புடன் வளர்ச்சியுற்றது.

சர் ஐசக் பிட்மன் என்னும் ஆங்கில எழுத்தாளர் 1837ஆம் ஆண்டில் தற்போது பழக்கத்தில் உள்ள புதிய வகைச் சுருக்கெழுத்து முறையை உருவாக்கினார். இவரது கோட்பாட்டின்படி 26 ஆங்கில எழுத்துகளும் சிறு சிறு கோடுகள், வட்டங்கள் மற்றும் புள்ளிகள் என மாற்றி எழுதப்படுகின்றன. ஆனால் இவை அனைத்தும் கோடுகள் போடப்பட்ட தாள்களில் மட்டுமே எழுதப்பட்டன.

பிட்மன் சுருக்கெழுத்து

ஜான் ராபர்ட் கிரெக் என்பவர் 1888ஆம் ஆண்டு இந்த முறையை மேம்படுத்தினார். முதலில் இச்சுருக்கெழுத்து முறை ஆங்கில மொழிக்கு மட்டுமே பயன்பட்டு வந்தது; காலப் போக்கில் இம்முறை பிற மொழிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.