பிடவூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சங்ககாலத்தில் பிடவூர் எனப் பெயர்பெற்றிருந்த இந்த ஊர் இக்காலத்தில் திருப்பட்டூர் என வழங்கப்படுகிறது.

சோழப் பெருவேந்தன் தித்தன் என்பவன் உறையூரில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் அவனது உறையூருக்குக் கிழக்கே இருந்த பிடவூரில் இருந்த வள்ளல் பெருஞ்சாத்தன். இவனை நக்கீரர் அறப்பெயர்ச் சாத்தன் எனப் போற்றுகிறார்.
இவன் அக்காலத்தில் கொக்கின் நகம் போல் நீண்ட அரிசிச்சோறும் பாஸ்மதி அரிசி போன்றது கருணைக்கிழங்குக் குழம்பும் புலவர்களுக்குத் தந்து பேணினானாம்.
இவனது தந்தை பிடவூர் கிழான். [1]

கி.பி. 7ஆம் நூற்றாண்டு சுந்தரர் தேவாரம் இவ்வூர்ச் சிவபெருமானை வாழ்த்துகிறது.[2]

அடிக்குறிப்பு[தொகு]

  1. தித்தன் செல்லா நலிசை உறந்தைக் குணாஅது நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் அறப்பெயர்ச் சாத்தன் நக்கீரர் பாடல் புறநானூறு 395 சோழநாட்டுப் பிடவூர் கிழான் மகன் பெருஞ்சாத்தனைப் பாடியது.
  2. அம்மானே ஆகமச் சீலர்க்கு அருள் நல்கும்
    பெம்மானே பேரருளாறன் பிடவூரன்
    தம்மானே தண்டமிழ் நூல் புலவாணர்க்கு ஓர்
    அம்மானை பரவையுண் மண்டலி அம்மானே
    சுந்தரர் தேவாரம் – பரவையுண்மண்டலி – பாடல் 6
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிடவூர்&oldid=2565947" இருந்து மீள்விக்கப்பட்டது