பிங்கெரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிங்கெரைட்டு
Fingerite
பொதுவானாவை
வகைவனேடேட்டு கனிமம்
வேதி வாய்பாடுβ-Cu2V2O5
இனங்காணல்
நிறம்கருப்பு; பிரதிபலிக்கும் ஒளியில் நடுத்தர சாம்பல்
படிக இயல்புவடிவமற்றது; 150 μm வரை ஆரச்சமச்சீர் வட்டம்;
படிக அமைப்புமுச்சாய்வு
பிளப்புஇல்லை
மிளிர்வுஉலோகத் தன்மை
கீற்றுவண்ணம்அடர் செம்பழுப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
அடர்த்தி4.78
ஒளியியல் பண்புகள்ஈரச்சு
மேற்கோள்கள்[1][2][3]

பிங்கெரைட்டு (Fingerite) என்பது β-Cu2V2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். தாமிர வனேடேட்டு வகை கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. முச்சரிவச்சுப் படிகங்களாக பிங்கெரைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. எல் சால்வடோர் நாட்டிலுள்ள இசால்கோ எரிமலையின் எரிமலைவாய் பள்ளத்தைச் சுற்றிலும் எரிமலைப் பதங்கமாக இது காணப்பட்டது.

சோடியம் சல்பேட்டு என்னும் தெனார்டைட்டு, இயுகுளோரின், சிடோய்பெரைட்டு, சைசைட்டு, பேனர்மேனைட்டு, சால்கோசயனைட்டு, நீலநிற செப்புசல்பேட்டுக் கனிமமான சால்கேந்தைட்டு போன்ற கனிமங்களுடன் சேர்ந்து பிங்கெரைட்டு பொதுவாகக் காணப்படுகிறது.

கார்னிகி கழகத்தைச் சேர்ந்த இலாரி பிங்கெர் (1940) (Larry W. Finger) என்பாரின் பெயரால் இக்கனிமம் பெயர் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிங்கெரைட்டு&oldid=2770233" இருந்து மீள்விக்கப்பட்டது