பா தின் சதுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பா தின் சதுக்கம் (Ba Đình Square) என்பது ஹனோயில் உள்ள ஒரு சதுக்கத்தின் பெயர் ஆகும். அங்கு அரசுத் தலைவர் ஹோ சி மின் வியட்நாம் ஜனநாயகக் குடியரசின் சுதந்திரப் பிரகடனத்தை செப்டம்பர் 2, 1945 அன்று வாசித்தார்.[1] கான் வுவாங் இயக்கத்தின் ஒரு பகுதியாக வியட்நாமில் 1886-1887 இல் நிகழ்ந்த பிரெஞ்சு எதிர்ப்புக் கிளர்ச்சியான பா தின் எழுச்சியின் காரணமாகப் பெயரிடப்பட்டது. [2] ஹோ சி மின் இறந்தபோது, அவரது நறுமணம் தோய்த்து பதனிடப்பட்ட உடலைக் காட்சிப்படுத்த கிரானைட் ஹோ சி மின் கல்லறை இங்கு கட்டப்பட்டது. இது சுற்றுலா மற்றும் யாத்திரைக்கான முக்கிய தளமாக உள்ளது.

பா தின் சதுக்கம் பா தின் மாவட்டத்தின் மையத்தில் உள்ளது, அதைச் சுற்றி குடியரசுத் தலைவர் மாளிகை, வெளியுறவு அமைச்சகம், திட்டமிடல் மற்றும் முதலீட்டு அமைச்சகம் மற்றும் தேசிய சட்டமன்றக் கட்டிடம் உட்பட பல முக்கியக் கட்டிடங்கள் உள்ளன.

பா தின் சதுக்கத்தின் 360-பாகை கோண தோற்றம்

மேற்கோள்கள்[தொகு]

  1. A brief chronology of Vietnam's history Anh Thư Hà, Hò̂ng Đức Trà̂n - 2000 "On September 2, 1945, President Hổ Chí Minh made public the Declaration of Independence at Ba Đình Square (Hanoi), thus founding the Democratic Republic of Vietnam with Hanoi as its capital."
  2. Origines: the streets of Vietnam : a historical companion J. Wills Burke - 2001 "Ba Đình Square, Where HỔ Chí Minh proclaimed Vietnamese independence On 2 September 1945, derives its name from this uprising.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா_தின்_சதுக்கம்&oldid=3873598" இலிருந்து மீள்விக்கப்பட்டது