பா. குப்புசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பா. குப்புசாமி (பிறப்பு: டிசம்பர் 28, 1935) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். பி. கே. சாமி என்ற புனைப்பெயரிலும் எழுதிவரும் இவர், தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்க பொது உறவு அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1958-ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், கட்டுரைகள், போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

வானொலித்துறை[தொகு]

மலேசிய வானொலியின் கல்வி ஒலிபரப்பில் இவர் பணியாற்றியுள்ளார். மேலும், பல வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.

நாடகக் கலைஞர்[தொகு]

இவர் வானொலி மற்றும் தொலைக்காட்சி, மேடை நாடகக் கலைஞராகவும் பணியாற்றி வருகின்றார்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._குப்புசாமி&oldid=784224" இருந்து மீள்விக்கப்பட்டது