பாஸ் நீரிணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாஸ் நீரிணை மற்றும் அதனுடன் இணைந்த முக்கிய தீவுகள்

பாஸ் நீரிணை (Bass Strait) தாஸ்மானியாவை அவுஸ்ரேலியப் பெருநிலப்பரப்பின் தெற்குப் பகுதியை (குறிப்பாக விக்டோரியா மாநிலத்தை) பிரிக்கும் கடல் நீரிணையாகும்.

கண்டுபிடிப்பு[தொகு]

இந்நீரிணையை 1797 இல் முதலில் அடைந்த ஐரோப்பியர் ஜோர்ஜ் பாஸ் என்பவர். இவரது நினைவாக நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் ஜோன் ஹண்டர் இந்நீரிணைக்குப் இப்பெயரைச் சூட்டினார்.

இந்நீரிணை மிகக் குறுகலான இடத்தில் 240 கிமீ அகலமானது. பொதுவாக 50 மீட்டர் ஆழமானது. இங்குள்ள கிங் தீவு, பிளிண்டர்ஸ் தீவு போன்றவற்றில் மனித குடியேற்றங்கள் இடம்பெற்றன. இந்நீரிணைப் பகுதியில் பெற்றோலிய வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நீரிணைக்குக் குறுக்காகப் பயணிக்க இலகுவான முறை வான்வழிப் போக்குவரத்தாகும்.

தாஸ்மானியாவின் ஏனைய நீர் நிலைகளைப் போலவே பாஸ் நீரிணையின் குறைந்த ஆழம் காரணமாக கடல் கொந்தளிப்பு அடிக்கடி ஏற்படுவதுண்டு. இதனால் 19ம் நூற்றாண்டு காலப்பகுதியில் பல கப்பல்கள் காணாமல் போயுள்ளன. இந்நீரிணையில் கிழக்குப் பகுதியைக் கண்காணிக்கும் பொருட்டு 1848 ஆம் ஆண்டில் டீல் தீவில் கலங்கரை விளக்கம் ஒன்று நிறுவப்பட்டது. பின்னர் 1859 இலும், 1861 இல் கிங் தீவிலும் வெளிச்ச வீடுகள் அமைக்கப்பட்டன.

தீவுகள்[தொகு]

இந்நீரிணையில் 50 க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. அவற்றில் சில வருமாறு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்_நீரிணை&oldid=1348772" இருந்து மீள்விக்கப்பட்டது