பாவெல் நவகீதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாவெல் நவகீதன் (pavel navageethan, ஜனவரி:17. 1984) என்பவர் இந்திய தமிழ்த் திரைப்பட நடிகர், இயக்குநர் ஆவார். [1]

வாழ்கை[தொகு]

பாவெல் நவகீதன் இந்தியாவின், தமிழ்நாட்டின், செங்கல்பட்டைச் சேர்ந்தவர். இவர் சென்னை, இலயோலாக் கல்லூரியில் சமூகவியல் படித்தவர். அங்கே படிக்கும்போது இவர் எடுத்த குறும்படமானது கல்லூரிகளுக்கு இடையிலான போட்டியில் பரிசை பெற்றது. இதனையடுத்து பல குறும்படங்களை தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்காக இயக்கினார். இதன் பிறகு திரைப்படத் துறையில் நுழைந்த இவர் மெட்ராஸ் திரைப்படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் தோன்றினார். இதன்பிறகு குற்றம் கடிதல் திரைப்படத்தில் ஆட்டோ தோழர் உதயனாகவும், வட சென்னை திரைப்படத்திலும் குறிப்பிடத்தக்க பாத்திரத்திலும் நடித்தார். இந்திலையில் வி 1 என்ற திரைப்டத்தை எழுதி இயக்கியுள்ளார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "“V1” படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கும் பாவெல் நவகீதன்.". செய்தி. cinemapluz.com. பார்த்த நாள் 16 சூலை 2019.
  2. ஆர். சி. ஜெயந்தன் (12 சூலை 2019). "ஒரு வீடு ஒரு கொலை ஒரு அதிகாரி". செவ்வி. இந்து தமிழ். பார்த்த நாள் 16 சூலை 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவெல்_நவகீதன்&oldid=2912313" இருந்து மீள்விக்கப்பட்டது