பாவுபொறி
Appearance
பாவுபொறி என்பது ஒரு வகைக் கட்டுமானப் பொறி அல்லது பொறியியல் ஊர்தியாகும். சாலையமைப்பு வேலைகளில் பயன்படும் இப் பொறி, சாலைப் பரப்பில் தார்க் கலவையைப் பரவி ஓரளவுக்கு அதனை இறுக்குவதற்கும் (compact) உதவுகிறது. சில பாவுபொறிகள் தார்க் கலவையைக் கொண்ட கொள்கலன் பொருத்தப்பட்ட வண்டியினால் இழுக்கப்படும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. இவற்றில், ஏற்கனவே அமைக்கப்பட்ட அடிப்படைகளின் மீது கொட்டப்படும் தார்க் கலவையைப் பாவுபொறி சீராகப் பரவும். பின்னர் இப் படையின் மீது பாரமான உருளிகளைச் செலுத்துவதன் மூலம் மட்டமான மேற்பரப்பாக உருவாக்கப்படும். பெரும்பாலான பாவுபொறிகள் தாமாகவே நகரக்கூடியன. இறப்பரினால் ஆன சில்லுகள் பொருத்தப்பட்ட பொறிகளும், இரும்புத் தடங்கள் மூலம் இயங்கும் பொறிகளும் உள்ளன.
பாவுபொறி உற்பத்தியாளர்
[தொகு]- கட்டப்பில்லர் (Catapillar)
- டெரெக்ஸ் (Terex)