பாவட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/பாவட்டை|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
பாவட்டை
Pavetta indica.jpg
Nong Nooch Tropical Garden. Thailand.
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): பாவட்டை
இனம்: Template:Taxonomy/பாவட்டைப.
இருசொற் பெயரீடு

L.
பாவட்டை பூ

பாவட்டை (Pavetta indica) என்பது தமிழக புதர்காடுகளில் நன்கு பச்சை நிறத்துடன் காணப்படும் புதர்செடி வகையாகும். இதன் மலர் தமிழகத்தில் வீடுகளில் வளர்க்கப்படும் இட்டலி பூ போன்று பார்ப்பதற்கு காணப்படும். இம்மலர் கொத்துகள் மிகுந்த வாசனை கொண்டது. இதன் இலை, வேர், காய் மருத்துவப்பயன் கொண்டது.[1]

விளக்கம்[தொகு]

பாவட்டை எப்பொழுதும் பச்சையாக இருக்கும் ஒரு புதர். தமிழகத்தில் எல்லாப் பகுதிகளிலும் புதர் காடுகளிலும், பெருங்காடுகளிலும் தானே வளர்கிறது. மெல்லிய காம்புள்ள இலைகளை எதிரடுக்கில் கொண்ட குறுஞ்செடிப் புதர். கொத்தான வெண்ணிற மலர்களை உச்சியில் கொண்டது. இது ஆவணி ஐப்பசி மாதங்களில் பூக்கும். இது 2 அடி முதல் 4 அடி உயரம் வரை வளரக்கூடியது. இலை 6-15 செ.மீ. நீளம் இருக்கும். இதன் வெண்மையான பூக்கள் பூச்சிகளைக் கவரும்.. பச்சையான காய்கள் முதிர்ந்து கருப்பு நிறமாக உருண்டையாக இருக்கும். இது 6 மி.மீ. விட்டத்தைக் கொண்டது. ஆசியா, ஆப்ரிகா மற்றும் ஆஸ்திரேலியாவில் அதிகமாகக் காணப்படும். இது விதை மூலம் இனப்பெருக்கும் செய்கிறது.

மருத்துவப் பயன்கள்[தொகு]

  • பாவட்டை வேர் அல்லது இலை, கொன்றை, சிற்றாமுட்டி, வேலிப்பருத்தி இவற்றின் வேர், மிளகு, ஓமம் வகைக்கு 10 கிராம் இடித்து நான்கு லிட்டர் நீரிலிட்டு அரை லிட்டராகக் காயச்சி வடித்து வேளைக்கு 30 மி.லி யாக தினம் 3 வேளை கொடுத்து வர வாத சுரம் போகும்.
  • பாவட்டை வேர், பூலாப்பூ சமனளவு அரைத்துக் கனமாகப் பூச அரையாப்புக் கட்டிகள் கரையும்.
  • பாவட்டைக் காயை சுண்டைக் காய் போலக் குழம்புகளில் சேர்த்து உண்டு வர வாத, கப நோய்கள் விரைவில் குணமாகும்.
  • பாவட்டை இலையை வதக்கி வாத வீக்கம், வலி ஆகியவற்றிக்கு இளஞ்சூட்டில் வைத்துக் கட்ட அந்நோய்கள் குணமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாவட்டை". கட்டுரை. http://thamil.co.uk+(2016. பெப்ரவரி. 11). பார்த்த நாள் 12 செப்டம்பர் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாவட்டை&oldid=2757440" இருந்து மீள்விக்கப்பட்டது